WELCOME நல்வரவு स्वागत हे
Welcome to my "desiredlifeandreallife.blogspot.com"
R.R.JAGADEESAN R.R.ஜெகதீசன் R.R.जगदीसन
Visit my another blogspot about GST Taxation "abhivirthi.blogspot.com" Visit my another blogspot namely My Lover is My Angel "https://myloverismyangel.blogspot.com/" Visit my another blogspot about Love Story "intimachofmylove.blogspot.com" Visit my another blogspot about Marriage Delay Remedy Solution Pooja at Home "marriagepooja.blogspot.com" Visit my another blogspot about Latest Inventions in Ancient Days "identicalinventions.blogspot.com" THANK YOU VERY MUCH FOR YOUR VISIT AND BOOKMARKING THIS BLOGSPOT FOR FREQUENT VISITS. SHARE THE ARTICLES WITH YOUR COLLEAGUES AND FRIENDS. TO VIEW MORE ARTICLES PLEASE VISIT AGAIN AND AGAIN. R.R. JAGADEESAN-----தாங்கள் இந்த வலைப்பதிவினை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. வலைப் பதிவு மற்றும் வலைப்பதிவிலுள்ள தகவல்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். வலைப்பதிவினை மீண்டும் பார்வையிட கனிவான வேண்டுகோள். வருக வருக. மீண்டும் மீண்டும் வருக வருக.. ஆர். ஆர். ஜெகதீசன்
CLICK THE LINK BELOW TO VIEW "MY LOVER IS MY ANGEL" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "என் காதலி என் தேவதை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
1. First Love Acceptance : முதல் சம்மதம் 2. First Touch : முதல் ஸ்பரிசம் 3. I belongs to you, You belongs to me, The city belongs to us : நான் உனக்கு சொந்தம். நீ எனக்கு சொந்தம். ஊரே நமக்கு சொந்தம் 4. First Love Gift : முதலாவது பரிசு 5. First Prayer : முதலாவது வழிபாடு 6. Prayer for Child : குழந்தை பாக்கியம் 7. Elder Blessings : உறவினர் நல்லாசி 8. Our first sadness : எங்களது முதல் சோகம் 9. First joint marriage discussion with my angel : முதலாவது திருமண கலந்தாய்வு (அவளும் நானும் சேர்ந்து) 10. Joint Prayer by us : இருவர் வழிபாடு 11. First marriage discussion with parents : முதலாவது திருமண கலந்தாய்வு (எனது பெற்றோர்களுடன்) 12. First marriage discussion with her mom : முதலாவது திருமண கலந்தாய்வு (அவளது தாயாருடன்) 13. My loss of my angel : என் தேவதையின் பிரிவு 14. First happiness after her marriage : திருமணத்திற்குப் பின்னர் அவளது முதல் சந்தோஷம் 15. Choosing name for child before birth : குழந்தைக்குப் பெயர் தேடல் 16. My mother's sadness and happiness : என் தாயாரின் வருத்தமும் சந்தோஷமும் 17. Not participating any functions or celebrations : எந்த ஒரு விசேஷங்களிலும் கலந்து கொள்ளாமை 18. First Female Child : முதலாவது பெண் குழந்தை 19. Little angel to my angel : தேவதைக்கு ஒரு குட்டி தேவதை 20. Bride Search : பெண் பார்க்கும் படலம் 21. Parents Own House : பெற்றோர் சொந்த வீடு 22. Joyful meeting : சந்தோஷமான சந்திப்பு 23. My Angel's Appreciation : என் தேவதையின் பாராட்டுதல்கள் 24. Bride Search Discussion : பெண் பார்ப்பதற்கு முன் ஒரு கலந்துரையாடல் 25. Marriage Invitation : திருமண அழைப்பு 26. House Warming : வீடு பார்த்துக் குடியேறுதல் 27. Happiness and Unhappiness of us : அளவுக்கு அதிகமான சந்தோஷம் மற்றும் சோகம் 28. Planning for Future : எதிர் காலத்தைப் பற்றி திட்டமிடல் 29. Marriage arrangements to my Little Angel : குட்டி தேவதைக்கு திருமண ஏற்பாடுகள் 30. Demise of Angel's Spouse : தேவதையின் கணவர் மறைவு 31. Love Marriage of My Angel's son : தேவதையின் மகனுக்கு காதல் திருமணம் 32. Same thought in both hearts : இரண்டு இதயங்களுக்குள் ஒரே எண்ணம் ஒரே சிந்தனை 33. Financial Crisis and its remedies in families : குடும்பத்தில் ஏற்படும் பணக் கஷ்டமும் அதற்கான நிவர்த்தியும் 34. Marriage Delays and its remedies : திருமணத் தடைகளும் அவற்றிற்கான பரிகாரங்களும் 35. Prayers for purchase of own house property : சொந்த வீடு வாங்கும் பாக்கியம் பெற செய்ய வேண்டிய வழிபாடுகள் 36. Loneliness in Palace : அரண்மனையில் தனிமை - கடல் கடந்த நாடுகளில் வாழ்வோரின் பெற்றோர் நிலை 37. House Construction Work : வீடு கட்டும் பணிகள் 38. Happiness Again : மீண்டும் ஒரு சந்தோஷம் 39. Meeting for Long Duration goodbye : நீண்ட நாட்களுக்கு பிரியா விடை சந்திப்பு
CLICK THE LINK BELOW TO VIEW "LOVE STORY" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "காதல் கதை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
01. Nostalgia for my lover's absence : என்னைக் காண என் காதலர் வராத ஏக்கம் 02. First Introduction : முதல் அறிமுகம் 03. First desire : முதல் விருப்பம் 04. First Word : முதல் வார்த்தை 05. First Day Game : முதல் நாள் விளையாட்டு 06. First Day Game continuity : முதல் நாள் விளையாட்டு தொடர்ச்சி 07. Lonelyness due to opening of Schools : பள்ளிகள் திறந்தமையால் தனிமை 08. Evening Classes : மாலை வகுப்புகள் 09. First meet with his Mom : முதன் முறையாக அவரது தாயாரை சந்தித்தது 10. First time prayer with his mom in temple : முதன் முறையாக அவரது தாயாருடன் கோயிலில் வழிபாடு 11. First expression of expectations : எதிர்பார்ப்புகளின் முதல் வெளிப்பாடு 12. First acceptance from mom : தாயாரின் முதல் சம்மதம் 13. Future dreams : எதிர் காலக் கனவுகள் 14. One about another : ஒருவரைப் பற்றி மற்றொருவர் 15. First cooking : முதல் சமையல் 16. Success in School Examination : பள்ளித் தேர்வில் வெற்றி 17. First Tour : முதல் சுற்றுலா 18. Pilgrimage First Day : புனித யாத்திரை முதல் நாள். 19. Pilgrimage Second Day : புனித யாத்திரை இரண்டாம் நாள் 20. Pilgrimage Third Day : புனித யாத்திரை மூன்றாம் நாள் 21. Pilgrimage Fourth Day : புனித யாத்திரை நான்காம் நாள் 22. Distribution of Temple Prasadams : கோயில் பிரசாதங்கள் விநியோகம் 23. First Acceptance and First Touch : முதல் சம்மதம் மற்றும் முதல் ஸ்பரிசம் 24. First Advise and Birth Day Gift : முதலாவது அறிவுறை மற்றும் பிறந்த நாள் பரிசு 25. Relationship Strengthened : உறவு வலுவடைந்தது 26. Deep Prayers : ஆழமான பிரார்த்தனை 27. Government Job : அரசாங்க வேலை 28. Isolation Again : மீண்டும் தனிமை 29. Anger on Father : தந்தை மீது கோபம் 30. Wait and Watch : எதிர் பார்த்துக் காத்திருத்தல் 31. My Thoughts Before Sleeping : தூங்குவதற்கு முன் எனது எண்ணங்கள் 32. Expectation and Disappointment : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் 33. Meet Again : மறுபடியும் சந்தித்தல் 34. Second Joyful Meet : இரண்டாவது மகிழ்ச்சியான சந்திப்பு 35. Remembrance of Past Periods : கடந்த காலங்களின் நினைவு 36. Lack of Courage or Cowardness : தைரியம் இல்லாமையா அல்லது கோழைத் தனமா? 37. Birth Day and Searching Name for Child : பிறந்த நாள் மற்றும் குழந்தைக்குப் பெயர் தேடல் 38. Visit of His Mom : அவரது தாயார் வருகை 39. Seemantham or Bangle Ceremony during Pregnancy : வளைகாப்பு 40. Child Delivery between Train Journey : இரயிலில் பயணத்தின் இடையே குழந்தை பிரசவம் 41. Future Plans not Fulfilled : எதிர் காலத் திட்டங்கள் நிறைவேறவில்லை 42. Frustration in Life : வாழ்க்கையில் விரக்தி 43. First Meet After Delivery : பிரசவத்திற்குப் பின் முதல் சந்திப்பு 44. Bride Search : மணமகள் தேடல் 45. Bride Search Difficulties : மணமகள் தேடலில் சிரமங்கள் 46. Long Conversation without Tears : கண்ணீர் இல்லாமல் நீண்ட உரையாடல் 48. Counselling for choosing Right Bride : சரியான மணமகள் தேர்வு செய்ய ஆலோசனை 49. Normal Conversation : சாதாரண உரையாடல் 50. Going to Home for Surgery : அறுவை சிகிச்சைக்கு சொந்த ஊர் செல்லுதல் 51. Return to Work Place after Surgery : அறுவை சிசிச்சைக்குப் பின் பணியிடம் திரும்புதல் 52. Secret of Daughter's Name and Bride Search : மகளின் பெயர் ரகசியம் மற்றும் வரன் பார்த்தல் 53. Unexpected Conversation : எதிர்பாராத உரையாடல் 54. Jasmine Flower Strings and Wheat Halwa : மல்லிகை பூவும் ஹல்வாவும் 55. Mother's House ; அன்னை இல்லம் 56. Final Conclusion in Bride search : மண மகள் தேடலில் இறுதி முடிவு 57. Betrothal : நிச்சயதார்த்தம் 58. Again Nostalgia : மீண்டும் ஏக்கம் 59. Conversation without satisfaction : திருப்தி இல்லாமல் உரையாடல் 60. Conversation about Love Failure with my relative : என் உறவினருடன் காதல் தோல்வி பற்றிய உரையாடல் 61. Wedding Invitation : திருமண அழைப்பிதழ் 62. Anxiety like Loss< : இழப்பு போன்ற கவலை 63. Last meeting with him before his marriage : திருமணத்திற்கு முன் அவருடன் கடைசி சந்திப்பு 64. Valentine's Wedding is Intolerate Tragedy : காதலர் திருமணம் என்பது தாங்க முடியாத சோகம் 65. First Meet After Marriage : திருமணத்திற்குப் பின்னர் முதல் சந்திப்பு 66. Intimacy of his mother with me : என்னுடன் அவரது தாயாரின் நெருக்கம் 67. Even After Marriage Saree Gift : திருமணத்திற்குப் பின்னரும் கூட சேலை பரிசு 68. Wedding Gift : திருமணப் பரிசு 69. Doubt Spoils Happiness : சந்தோஷத்தைக் கெடுக்கும் சந்தேகம் 70. What Will be the Next? : அடுத்தது என்னவாக இருக்கும்? 71. Late and Hasty Decisions will Spoil the Future ; தாமதமான மற்றும் அவசர முடிவுகள் எதிர்காலத்தை கெடுக்கும். 72. Feelings Like Loneliness : தனிமை போன்ற உணர்வுகள் 74. Double Happyness ; இரட்டிப்பு சந்தோஷம் 75. Pongal Festival : பொங்கல் பண்டிகை 76. Intimate Relationship : நெருக்கமான உறவு 77. Wrong Decisions due to Overconfidence : அதிக நம்பிக்கையினால் தவறான முடிவுகள் 78. Life without Interest : ஆர்வம் இல்லாத வாழ்க்கை 79. Last Deepawali Gift : கடைசி தீபாவளிப் பரிசு 80. Unbearable Tragedy : தாங்க முடியாத சோகம் 81. Unforgettable Memories : மறக்க முடியாத நினைவுகள். 82. Marriage Arrangements to Daughter : மகளுக்கு திருமண ஏற்பாடுகள் 83. Daughters' Marriages and Ill-health : மகள்களின் திருமணங்கள் மற்றும் உடல் நலக் குறைவு 84. Hard Times for Both : இருவருக்கும் கடினமான காலம் 85. How to Prevent Loss in Business? : வணிகத்தில் இழப்பைத் தடுப்பது எப்படி? 86. Invisible Companion : கண்ணுக்குத் தெரியாத துணை 87. How to Choose a Life Partner? : வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி? 88. Mutual Exchange of Happenings : நிகழ்வுகளின் பரஸ்பர பரிமாற்றம். 89. The Glory of the Temple Steps : கோவில் படிகளின் மகிமை 91. Temples, Churches, Mosques and Places of Worship : கோவில்களும் ஆலயங்களும் பள்ளிவாசல்களும் வழிபாட்டுத் தலங்களும் 92. Homams and Yagams : ஹோமங்களும் யாகங்களும் 93. Conversation about the marriage of the son : மகனின் திருமணம் பற்றிய உரையாடல் 94. Son's Marriage : மகனின் திருமணம் 95. Decrease of Intimacy due to Family Members : குடும்ப உறுப்பினர்கள் காரணமாக நெருக்கம் குறைதல் 96. His Arrival is Expected : அவரது வருகை எதிர்பார்க்கப் படுகின்றது 97. Labor Pain and Abdominal Pain : பிரசவ வலியும் வயிற்று (பொய்) வலியும் 98. Minimizing Frequent Visits : அடிக்கடி வருகைகளைக் குறைத்தல் 99. Conversation After Long Interval : நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உரையாடல் LAST ARTICLE. Bamboos Used During Construction : முட்டுக் கொடுத்த மூங்கில்கள்
CLICK THE LINK BELOW TO VIEW "DESIRED LIFE AND REAL LIFE" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "விரும்பிய வாழ்க்கை மற்றும் நிஜ வாழ்க்கை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
001. Schoolmate : பள்ளித் தோழி 002. Schoolmate : பள்ளித் தோழன் 003. Grandmothers' Affection : ஆச்சிகளின் பாசம் 004. Six to Sixty Years : ஆறு முதல் அறுபது வரை 005. You too late : நீங்கள் மிகவும் தாமதம் 006. Job Opportunity during Flight Travel : விமான பயணத்தின் போது வேலை வாய்ப்பு 007. Familiar Voice : பரிட்சயமான குரல் 008. Stock Trading and Share Market : பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை 009. Love Memories : காதல் நினைவுகள். 010. Divorce Withdrawal : விவாகரத்து திரும்பப் பெறுதல் 011. Marriage Blessings From God : கடவுளிடமிருந்து திருமண ஆசீர்வாதம் 012. Betel Garland and Vadai Garland : வெற்றிலை மாலையும் வடை மாலையும் 013. King and Queen Plate : ராஜா ராணி தட்டு 014. Alimony : ஜீவனாம்சம் 015. Two Solutions for the Same Problems (Solution-1) : ஒரே பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள். (தீர்வு-1) 016. Two Solutions for the Same Problem (Solution-2) : ஒரே பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள். (தீர்வு-2) 017. Love because of Misunderstanding : தவறான புரிதலின் காரணமாக காதல் 018. Bliss is Rapture : பேரின்பம் பேரானந்தம். 019. First Love is Mightgier than all Relations : அனைத்து உறவுகளையும் விட முதல் காதல் வலிமையானது 020. Astrology Succeeded : ஜோதிடம் வெற்றி பெற்றது 021. Unforgetable Memories : மறக்க முடியாத நினைவுகள் 022. Actual Life and Imagination Life : உண்மையான வாழ்க்கை மற்றும் கற்பனை வாழ்க்கை 023. House Warming Ceremony : கிரஹப் பிரவேசம் 024. Anxiety and Happiness : கவலையும் மகிழ்ச்சியும் 025. Unexpected Betrothal and Sudden Marriage : எதிர்பாராத நிச்சயதார்த்தம் மற்றும் திடீர் திருமணம். 026. Kunkumam Casket : குங்குமச் சிமிழ் 027. The Glory of the Lamps : விளக்குகளின் மகிமை 028. The Heart Never Forgets : நெஞ்சம் மறப்பதில்லை 029. Unstable Income : நிலையில்லா வருமானம். 30. Job Looking Foil : வேலை தேடும் படலம்

Sunday, July 25, 2021

Alimony : ஜீவனாம்சம்

 ஜீவனாம்சம்


அவரும் நானும் காதலித்து பெற்றோர்களின் முழு ஒப்புதலுடன் உற்றார் உறவினர் சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் புடைசூழ தடபுடலாகத் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் இருவரின் ஆரம்ப கால திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமானதாக இருந்தது. 


நாட்கள் செல்லச் செல்ல அவர் இரவில் மதுபானம் குடித்து விட்டு வீட்டிற்கு வருவது மற்றும் தாமதமாக வருவது போன்ற செயல்கள் ஆரம்பித்தன. நான் விசாரித்துப் பார்த்ததில் அவருக்கு சிகரட் குடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளதாகவும் திருமணத்திற்கு முன்னர் என்னைக் காண வரும் சமயத்தில் மாத்திரம் மிக மிக யோக்கியமானவராகக் காட்டிக் கொண்டு வந்திருந்ததாகவும் தெரிய வந்தது. எனக்கோ என் குடும்பத்தாருக்கோ இவ்வாறான பழக்கங்கள் அறவே பிடிக்காது.


என் பெற்றோரிடத்தில் தெரிவித்து அவருக்கு அறிவுறைகள் சொல்லுமாறு கேட்டேன். அதற்கு காதல் திருமணம் செய்து கொண்ட நான் காதலிக்கும் போதே அவ்வாறான கெட்ட பழக்கங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என நன்கு அறிந்திருக்க வேண்டுமெனவும் அந்த மாப்பிள்ளையைத் தவிர வேறு யாரையும் மணந்து கொள்ள மாட்டேன் என பிடிவாதம் செய்த காரணத்தால் பெற்றோர் எதுவும் விசாரிக்காமல் விசாரித்து தெரிய வந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை என்பதாலும் வேறு வழியின்றி திருமணம் செய்ய வேண்டியதாயிற்று என்றும் கை விரித்து விட்டார்கள். 


இரவு நேரங்களில் அவர் மதுபானம் அருந்தி விட்டு வருவதன் காரணமாக அந்த வாடை எனக்குப் பிடிக்காத காரணத்தால் இல்லறத்திலிருந்து விலக வேண்டியதாயிற்று. வேறு வழியில்லை. அவர் ஒரு அரசு அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் இருந்து வருகின்றார். மாதா மாதம் கைநிறையச் சம்பளம். ஓய்வு பெற்று விட்டால் கூட கடைசி காலம் வரையில் பென்ஷன் கிடைக்கும் படியான பதவி. சில வருடங்களில் நாங்கள் இருவரும் பிரிய நேரிட்டது. 


நான் எனது தாய் வீட்டிற்கு வந்து தங்கி விட்டேன். குடும்ப செலவிற்காக நான் திருமணத்திற்கு முன்னர் பார்த்த தனியார் நிறுவனத்தில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தேன். என் தாய் தந்தையைரை கண்கலங்காமல் பார்த்துக் கொண்டேன். வயது முதிர்வின் காரணமாக பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இயற்கை எய்திவிட்டார்கள். கூடப் பிறந்த அண்ணன்கள் தம்பிகள் அக்காள் தங்கை என யாரும் இல்லை. தூரத்து உறவினர்கள் தான் இருக்கின்றார்கள். நான் தனி மரமானேன். 


அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. எங்கு பணியாற்றுகின்றார் எப்படி இருக்கின்றார் என்பதே தெரியவில்லை. உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாத போதும் கூட நான் சுமங்கலியாக வாழ்க்கை நடத்தி வந்தேன். எனக்கு வருகின்ற வருமானத்தில் நான் என் வாழ்க்கையை நடத்தினேன். பல வருடங்கள் கழித்து வெளியூரில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்ற எனது தூரத்து உறவினர்கள் அவரைப் பார்த்ததாகவும் அவருக்குத் திருமணமாகி விட்டது எனவும் சொன்னார்கள். அவருக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணும் இருப்பதாகவும் சொன்னார்கள். நான் எதனையும் காதில் வாங்கவில்லை. எனக்கு வருகின்ற வருமானத்தில் நான் எஞ்சியுள்ள காலத்தைக் கழித்து விட்டு இறைவனடி சேர்ந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன். 


ஆனால் எனது உறவினர்கள் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது இரண்டாவதாக ஒரு அரசு அதிகாரி திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து எனது வாழ்க்கைச் செலவிற்கு ஜீவனாம்சம் பெற வேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள்.  உறவினர்களின் தொல்லை தாங்க முடியாத காரணத்தால் முதல் மனைவி நான் உயிரோடு இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டது செல்லாது என நீதி வழங்கக் கோரி நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். 


விவாகரத்து கோரினால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் என்ன எனச் சொல்ல வேண்டும். கணவன் மனைவி இருவரும் கட்டாயம் ஓராண்டு காலம் பிரிந்திருக்க வேண்டும் என சட்டம் சொல்கின்றது. ஆனால் எனது வழக்கில் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது கணவர் செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது அது தவறு. எனவே என் கணவரை என்னுடன் வாழ்வதற்கு சேர்த்து வைக்க வேண்டும் என்பது.  


இந்த காரணத்தால் நீதி மன்றத்தில் வழக்கு காலதாமதம் வாய்தாக்கள் எதுவும் இல்லாமல் துரிதமாக நடைபெற்று வந்தது. 


அவர் கொடுத்த பதில் மனுவில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தாலும் அவருக்கு குடிப்பழக்கம் உண்டு என்று முதல் மனைவி கருதி ஒதுக்கி வைத்து விட்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டதாகவும் அதற்கு அவர் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்றும் வாதிட்டார். கூடுதலாக அவர் இரண்டாவது திருமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை எனவும் இயற்கைப் பேரழிவின் காரணமாக உற்றார் உறவினர் சொந்தங்கள் இழந்த ஒரு அபலைப் பெண் அனாதையாகி விடக் கூடாது என்னும் காரணத்தால் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தின் படி (Living Together) அடைக்கலம் கொடுத்து ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்து தற்போது இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்புகள் தமக்கு இருப்பதாகவும் முதல் மனைவியுடன் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாது எனவும் பதில் மனு தாக்கல் செய்தார். 


இருவரது வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் முதல் மனைவி உயிரோடு இருக்கும் சமயம் சட்டப்படி விவாகரத்து எதுவும் பெறாமல் இன்னுமொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் அதன் மூலம் குழந்தைகள் பெற்றெடுப்பதும் சரியல்ல எனச் சொல்லி அவரை என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு அறிவுரை சொல்ல கலந்தாலோசனைக்கு அழைத்தார்கள். 


கலந்தாலோசனையின் போது நீதிபதி அவர்கள் ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு முதல் மனைவி உயிரோடு  இருக்கும் போது முதல் மனைவியிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதோ அல்லது வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக் கொண்டோம் எனச் சொல்லி முதல் மனைவியின் கோரிக்கையை நிராகரிப்பதோ சட்டப்படி குற்றம் எனவும் அதற்கு தண்டனை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அதன் காரணமாக அரசாங்க உத்தியோகம் பறிபோகலாம் என்பதன் காரணமாக அவர் முதல் மனைவியான என்னுடன் சேர்ந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது எனத் தெரிவித்து விட்டு ஒரு குறிப்பிட்ட தேதிக்கு வாய்தா போட்டு விட்டனர். 


அதற்குப் பின்னர் முதல் மனைவியான என்னுடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதற்கு முதல் மனைவிக்கு விருப்பம் இல்லையெனில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினை முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என ஜீவனாம்சத் தொகை இவ்வளவு என கணக்கிட்டு கட்டளை பிறப்பித்தது.. இடைப்பட்ட காலத்தில் நீதி மன்றத்தில் ஆணை பிறப்பித்ததும் தமக்கு வேலை பறி போய் விடுமோ என்னும் அச்சம் மற்றும் அதிர்ச்சியின் காரணமாக மாரடைப்பு வந்து இரண்டு மூன்று தின்ங்களில் கணவர் இயற்கை எய்தி விட்டார். 

https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/alimony.html










அவரது இரண்டாம் மனைவி நேரடியாக என்னுடைய இல்லத்திற்கு வந்து திருமண பந்தத்தில் இணையாமலேயே சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த அவரை மனது புண்படுத்தி வேலை போய் விடுமோ என்னும் அச்சத்தை உருவாக்கி அவரை சாகடித்து விட்டாய். முறைப்படி தாலி கட்டாமல் நாம் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த போதிலும் அவர் இல்லாத இந்தப் பூவுலகில் விதவையாக வாழ எனக்கு விருப்பம் இல்லை எனச் சொல்லி விட்டு என்னுடைய பிடிவாத குணத்தால் தான் அந்தக் குழந்தைகள் அனாதைகளாகி விடப் போகின்றார்கள் எனச் சொல்லிச் சென்ற இரண்டு நாட்களில் அந்தப் பெண்ணும் வருங்காலத்தில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்னும் அதிர்ச்சியின் காரணமாக உயிர் நீத்தாள். 


அரசாங்க அலுவலகத்தில பணியாற்றுவோர் அவர் மனைவியுடன் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த சமயத்தில் கொடுத்த வாரிசு நியமன விருப்ப மனுவின் அடிப்படையில் எனக்கு முழுப் பென்சனையும் வழங்கினார்கள். பணியில் இருக்கும் போதே இயற்கை எய்திய காரணத்தினால் கருணை அடிப்படையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசுப் பணி வழங்கும் நடைமுறையின்படி எனக்கு அரசாங்க உத்தியோகம் வழங்கப் பட்டமையால் நான் தனியார் நிறுவனத்திலிருந்து விலகி அரசுப் பணியில் சேர்ந்து விட்டேன். 


அதே சமயம் அவருக்குப் பிறந்த குழந்தைகள் இருவரும் அனாதைகளாகி விட்ட காரணத்தால் அந்த இரண்டு குழந்தைகளையும் என் பராமரிப்பில் வளர்த்து வருகின்றேன். எனக்கு வருகின்ற என் கணவரது பென்சன் தொகையினையும் என்னுடைய சம்பளத்தையும் கொண்டு நான் குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.


என்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவர் என்னுடன் இல்லறத்தில் ஈடுபடாமல் வேறு யாரோ ஒருத்தியுடன் இருந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த போதிலும் நான் சுமங்கலி என்னும் பெயரில் கழுத்திலே தாலி நெற்றியிலே பொட்டு காலிலே மெட்டி தலையில் மல்லிகைப்பூ ஆகியவற்றுடன் சுப காரியங்கள் நடைபெறுகின்ற எல்லா இடங்களுக்கும் மிக மிகச் சந்தோஷமாக தனிமையில் சென்று வந்தேன். ஆமாம். அவர் உயிரோடு இருக்கும் போது நான் வாழாவெட்டியாக இருந்த போதிலும் சுமங்கலி என்னும் அந்தஸ்து கிடைத்தது. 


என்னுடைய பிடிவாதத்தாலும் உற்றார் உறவினர் சொந்தங்களின் சொல் பேச்சினைக் கேட்டு வழக்குத் தொடுத்த காரணத்தாலும் நான் தற்போது பூவிழந்து பொட்டிழந்து தாலியில்லாமல் மெட்டியில்லாமல் விதவை என எல்லோராரும் கருதப்பட்டு சுப காரியங்கள் அனைத்திலிருந்தும் ஒதுக்கி வைக்கப் படுகின்றேன். எனவே என்னால் எந்த இடத்திற்கும் சந்தோஷமாக முன்பு போல சென்று வர முடியவில்லை. அதுவும் தவிர அவருக்குப் பிறந்துள்ள இரண்டு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பும் எனக்கு வந்து விட்டது.


தாலி கட்டிய கணவரைப் பற்றிக் கவலைப் படாமல் நானுண்டு என் வேலையுண்டு என்று வாழாவெட்டியாக இருந்த சமயத்தில் இருந்த மன நிம்மதியினையும் சந்தோஷத்தினையும் உற்றார் உறவினர் சுற்றத்தார் சொல் பேச்சினைக் கேட்டு என் பிடிவாத குணத்தின் காரணமாக தாலி கட்டிய கணவர் மீது வழக்குத் தொடுத்து அவர் மனதினைப் புண்படுத்தி அவரையும் இழந்து அவர் மறைந்த காரணத்தால் அவருடன் இல்லற வாழ்க்கையினை சந்தோஷமாக நடத்தி வந்த அவருக்கு விருப்பமான அவரது இரண்டாவது மனைவியையும் நோகடித்து அவரது இரண்டாவது மனைவி இறப்பின் காரணமாக அவருக்குப் பிறந்துள்ள வாரிசுகளை அனாதைகளாக்கி அவரிடமிருந்து பெற நினைத்த ஜீவனாம்சத்திற்குப் பதிலாக அவருடைய பென்சன் மற்றும் கருணை அடிப்படையிலான வேலை ஆகியவற்றுடன் அனாதைகளாகப் போய் விட்ட அவரது இரண்டு குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் உள்ள தற்போதைய நிஜ வாழ்க்கையையும் எண்ணிப் பார்க்கும் போது எனக்கே என் மேல் வெறுப்பு உண்டாகின்றது. 


என் கருவில் உருவாகாத அவரது வாரிசுகள் வளர்ந்து தமது சொந்தக் காலில் நிற்கும் வரையாவது என்னை உயிருடன் வாழ வைக்க வேண்டும் என இறைவனிடம் கோரிக்கை வைத்து வழிபடுவது என் வழக்கமாகி விட்டது. இறைவா அவருக்குப் பிறந்த குழந்தைகள் சொந்தக் காலில் நிற்கும் வரையில் எனக்கு நல்வழி காட்டு.


Saturday, July 24, 2021

King and Queen Plate : ராஜா ராணி தட்டு

ராஜா ராணி தட்டு


எப்போதுமே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் வெயிலே படாமல் முழுவதுமாக துணியால் மூடி மறைத்த எனது மேனியை வேலை கிடைத்ததன் காரணமாக அனைவரும் போல சேலை ரவிக்கை உடுத்திக் கொண்டு எனக்கு பணி நியமன ஆணை கிடைத்த அலுவலகத்திற்குச் சென்றேன். எனது தந்தையும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றி வந்தமையால் அவரும் கூட வந்தார்.


அலுவலகத்தில் பணியில் சேருவதற்கான (Joining Report) கடிதத்தினை உயர் அலுவலரிடத்தில்  கொடுத்தேன். எனது கடிதத்தினை அலுவலர் பெற்றுக் கொண்டவுடன் எனக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவில் பணி ஒதுக்கீடு  செய்து அந்த பிரிவில் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். நானும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்தப் பிரிவுக்குச் சென்றடைந்தேன்.


எனக்கு அலுவலகத்தைப் பற்றியோ அல்லது அலுவலக வேலைகள் பற்றியோ அல்லது அலுவலக நடைமுறைகள் பற்றியோ எதுவும் தெரியாது. வேலையில் சேரும் நாள் வரையில் எந்த ஒரு அலுவலகத்திலும் மழைக்குக் கூட ஒதுங்கியது  கிடையாது. எனக்கு ஒதுக்கப்பட்ட பணிப்பிரிவில் எனது இருக்கைக்கு அருகாமையில் ஒருவர் அமர்ந்திருந்தார். 


எனது தந்தை அவரிடத்தில் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் என் மகளுக்கு அலுவலக நடைமுறைகள் எதுவும் தெரியாது. என் மகளுக்கு நீங்கள் தான் வேலைகளில் உதவியாக இருந்து பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரிடத்தில் என் தந்தை பேசிக் கொண்டிருக்கும் சமயம் அதே அலுவலகத்தில் பணியாற்றும் சில பெண்கள் தேனீர் அருந்தச் செல்வோமா எனக் கேட்டனர். அச்சமயத்தில் என்னை அனைவரிடத்திம் அறிமுகம் செய்து வைத்து விட்டு இன்று முதல் இவர்களும் நமது குழுவில் ஒரு உறுப்பினர் எனச் சொல்லி என்னையும் என் தந்தையையும் கேன்டீனுக்கு அழைத்துச் சென்றார். 


அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது அவருக்குப் பெண் தோழிகள் நாற்பதுக்கு மேற்பட்டோர் உள்ளனர் என்பது. நானும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன். என்னுடைய தந்தைக்கு என்னை மிகச் சரியான இடத்தில் ஒப்படைத்து விட்டதாக ஒரு உட்புற மகிழ்ச்சி. அவர் எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 


அனைவரும் பிஸ்கட் மற்றும் காபி டீ ஆகியவை சாப்பிட்டு முடித்த பின்னர் என் தந்தை பணம் தருவதாகச் சொன்னதற்கு நீங்கள் எங்கள் விருந்தாளி எனச் சொல்லி விட்டு பணம் கொடுக்க விடவில்லை. அனைவரும் போட்டி போட்டு பணம் செலுத்துவதாகச் சொன்ன சமயம் அவர் பணம் செலுத்தினார். அதன் பின்னர் என்னுடைய தந்தை இல்லம் திரும்பினார். 


முதல் நாள் என்பதால் நான் மதிய உணவு எதுவும் கொண்டு செல்லவில்லை. எனக்கு அருகில் அமர்ந்து பணியாற்றியவர் அவரது இல்லத்திலிருந்து எதுவும் கொண்டு வராத காரணத்தால் மதிய உணவுக்கு கேன்டீன் செல்வோமா எனக் கேட்டார். அதற்கு நான் நாம் இருவர் மட்டுமா எனக் கேட்டதற்கு அவருக்கு வலது பக்கத்தில் அமர்ந்து பணியாற்றி வருகின்ற அந்தப் பெண்ணும் கூட வரப் போகின்றாள் என்றும் கேன்டீனில் நிறையப் பேர் நமது வருகைக்காகக் காத்து இருப்பார்கள் எனவும் சொல்லி விட்டு நாங்கள் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் எனச்  சொன்னார். 


பணியாற்றும் இடத்திலிருந்து கேன்டீன் செல்லவதற்குள் அவரது தோழிகளில் சிலர் சேர்ந்து கொண்டார்கள். நான் என்னையும் அறியாமல் நீங்கள் எப்போதும் உங்கள் தோழிகள் புடைசூழத் தான் டீ காபி மற்றும் உணவருந்த கேன்டீன் செல்வீர்களா எனக் கேட்டேன். எனக்கு மட்டும் தோழிகள் அல்ல இன்று முதல் அனைவரும் உனக்கும்  தோழிகள் எனச் சொன்னார். அவர் அனைவரும் நம் இருவருக்கும் தோழிகள் எனச் சொன்னதைக் கேட்ட எனக்கு ஒரே நாளில் இவ்வளவு தோழிகளா என ஆச்சர்யமாக இருந்தது.


நான் பணியில் சேர்ந்த சில நாட்களில் அவருடன் மிக மிக நெருக்கமாக பேசிப் பழகி விட்டேன். ஆனால் அவர் என்னிடத்தில் மாத்திரம் நெருக்கமாக பழகாமல் அனைவரிடத்திலும் நெருக்கமாகப் பழகுவது எனக்கு உறுத்தலாக இருந்தது. குறிப்பாக அவருக்கு வலது பக்கத்தில்  எனக்கு முன்னரே பணியில் சேர்ந்து பணியாற்றும் பெண்ணுடன் என்னுடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டிலும் அதிக நெருக்கமாக இருப்பது கண்டு எனக்கு பொறாமையக இருந்தது.


அவர் எதுவும் பேசாமல் மிக மிக பொறுமையாக இருப்பார். காரணம் அவருக்கு வலது பக்கத்தில் அமர்ந்து பணியாற்றும் பெண் எப்போதும் அவரது வலது காதிற்கு மிக மிக பக்கத்தில் வந்து ஏதாவது கிசு கிசுத்துக் கொண்டேயிருப்பாள். அவரையோ அல்லது என்னையோ பேச விடமாட்டாள்.


 அவரிடத்தில் அந்தப் பெண் எப்படியெல்லாம் பேசுகின்றாள் என்பதனை உற்றுக் கவனித்த நானும் அவளைப் போல பேச ஆரம்பித்தேன். அலுவலக நேரத்தில் நான் அவருடன் மனம் விட்டுப் பேச முடியாத நிலையில் அலுவலகம் முடிந்ததும் அவரை என்னுடன் பேசிக் கொண்டே வருமாறு அழைத்தேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார். 


அவரும் நானும் அலுவலகத்திற்கு நேர் எதிரே பேருந்தில் ஏறாமல் அடுத்த பஸ் ஸ்டேஜ் வரை பேசிக்கொண்டே நடந்து செல்வோம். அங்கிருந்து பஸ்ஸில் சென்று என்னுடைய இல்லம் உள்ள இடத்திற்கு அருகாமையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி அவருடன் என் இல்லம் அமைந்துள்ள தெரு வரையில் பேசிக் கொண்டே நடந்து வந்த பின்னர் அவருக்கு விடை கொடுத்து அனுப்புவேன். அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. அதன் காரணமாக நடந்த களைப்பு எதுவும் எனக்குத் தெரியாது. 


அவருக்கு வலது புறம் அமர்ந்து பணியாற்றும் பெண் சுத்த சைவம். அதுவும் தவிர அடிக்கடி அந்த நோன்பு இந்த நோன்பு அந்த விரதம் இந்த விரதம் எனச் சொல்லி வீட்டிலிருந்து ஏதாவது பண்டங்கள் கொண்டு வந்து கொண்டே இருப்பாள். அவள் என்ன கொண்டு வந்தாலும் எப்போது கொண்டு வந்தாலும் எதிர்ப்பு எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவார். ஆனால் நான் கொடுக்கும் உணவினை சில குறிப்பிட்ட நாட்களில் வேண்டாம் எனச் சொல்லும் போது எனது மனது மிகவும் சங்கடப்படும். 


சில நாட்கள் கவனித்த பின்னர் அவரிடத்தில் ஏன் வேண்டாம் எனச் சொல்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் திங்கள் மற்றும் சனி ஆகிய தினங்களில் அசைவம் தொடுவதில்லை என்பது. அவர் சொன்ன காரணத்தால் வருடத்தில் 104 நாட்கள் என்னால் அவருக்கு அசைவம் கொடுக்க முடியாது. அதுவும் தவிர எங்கள் பண்டிகை நாட்களில் பல நாட்கள் விடுமுறையாகப் போய் விடும். ஆனால் அவள் கடைப்பிடிக்கும் விரதம் மற்றும் நோன்பு நாட்களில் அலுவலக நாளாக இருக்கும். எனவே அவளுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பம்  எனக்குக் கிடைக்காது.


எனக்கு இது ஒரு நெருடலாகவே இருந்தது. இந்த நிலையில் நான் தினந்தோறும் எனது வீட்டிலிருந்து அசைவ உணவுகள் கொண்டு சென்று இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண ஆரம்பித்தோம்.  


https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/king-and-queen-plate.html


அவருக்காகவும் எனக்காகவும் ராஜா ராணி  தட்டுகள் ஒரு செட் வாங்கி அந்த தட்டுகளில் பகல் உணவு உட்கொள்ள ஆரம்பித்தோம். அவரிடத்தில் அவருக்கு எந்தத் தட்டு வேண்டும் எனக் கேட்டதற்கு ராணி படம் பொறித்த தட்டினைத் தேர்வு செய்தார். காரணம் கேட்டமைக்கு நானே என்னை ராஜாவாகக் கருதினால் கர்வம் தலைக்கேறி விடும் எனவும் ராணி தான் தேவை எனவும் சொன்னார். ஆமாம். ராணி உருவம் பொறித்த தட்டு அவருடையது. ராஜா உருவம் பொறித்த தட்டு என்னுடையது. அவர் சாப்பிட்ட தட்டினைக் கூட நானே கழுவ ஆரம்பித்தேன். இதனைக் கண்ணுற்ற அலுவலகத் தோழிகள் எனக்கும் அவருக்கும் சேர்த்து ஒரே ஒரு சாக்லெட் மட்டும் கொடுத்து பகிர்ந்து கொள்ளும்படி சொல்ல ஆரம்பித்து அது வழக்கம் ஆகி விட்டது.


நமது நெருக்கம் அதிகமாகிக் கொண்டிருந்த அதே வேளையில் அந்தப் பெண் அவரது கையில் நோன்புக் கயிற்றினைக் கட்டி விட்டு குறைந்தது மூன்று நாட்கள் அசைவம் தொடக் கூடாது எனச் சொல்வாள். அவள் கொண்டு வருகின்ற சித்திரான்னத்தை அவள் கொண்டு வரும் தட்டில் வைத்து தான் சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடும் தட்டில் சாப்பிடக் கூடாது என்பாள். 


அவள் சொல்லுக்கு அவர் பல நேரங்களில் கட்டுப்படுவதால் நான் சில நாட்களில் ஆத்திரப்படுவேன். அச்சமயத்தில் அவர் என்னைக் காட்டிலும் குறைவான எடையுடன் இருப்பதால் அவர் எடையினைக் கூட்ட வேண்டும். 10 பைசா கயிறு கட்டிவிட்டு சாப்பாட்டில் கட்டுப்பாடு விதித்தால் எப்படி உடம்பு தேறும்? சத்தான உணவு சாப்பிட்டால் நோய் என்பது அண்டாது என அவளிடத்தில் சண்டை போடுவேன். காரணம் அவர் என்னைக் காட்டிலும் 10 கிலோ எடை குறைவு. அவர் எனக்கே சொந்தம் என நினைப்பேன். 


https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/king-and-queen-plate.html


வீட்டிலே என் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் அவரது நலம் விசாரிக்கும் சமயம் என் தந்தையிடத்தில் என்னுடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றியது போல அவரை எனக்கு திருமணம் செய்து வைத்தால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பேன் எனச் சொன்னேன். மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வீட்டில் யாரிடத்திலும் சொல்லாமல் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து அவரிடத்தில் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனச் கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை. என் தந்தை அவரிடத்தில் துலுக்க நாச்சியார் பற்றி எடுத்துச் சொல்லியும் கூட அவர் சம்மதிக்கவில்லை. 


அதன் பின்னர் அதே அலுவலகத்தில் உள்ள சில முக்கிய  மனிதர்களை வைத்து அறிவுறைகள் சொல்லி பார்த்ததில் அவர் உடன்படவில்லை. என் தந்தை அவரிடத்தில் பெற்றோருக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வீட்டார் இருவரையும் ஒதுக்கி வைத்து விடுவார்கள் எனவும் என் தந்தை பூரண மனதுடன் திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர் மதமாற்றம் இல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். 


எனது தந்தை பதிவுத் திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில் என்னை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து வரன் நிச்சயம் செய்தார்கள். அவரிடத்தில் மீண்டும் ஒரு முறை நேரில் வந்து திருமணம் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் எனவும் அதற்கு முழு ஒத்துழைப்பு தேவை எனவும் சொல்ல அவர் சரியென ஒப்புக்கொண்டார். 


எனக்கு லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையை முடிவு செய்து திருமண தேதியினைக் குறித்து விட்டார்கள். நான் என் தந்தையிடத்தில் திருமண நிகழ்ச்சியில் அவர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் அவர் கலந்து கொண்டால் மட்டுமே திருமண பதிவுப் பதிவேட்டில் கையெழுத்திடுவேன் எனச் சொன்னேன். அவரிடத்திலும் சொல்லி விட்டேன்.


திருமண நாள் வந்தது. திருமணத்திற்கான பரிசுப் பொருளை தேர்வு செய்வது முதல் திருமணம் நடக்கும் இடம் வரையில் கொண்டு வருகின்ற பொறுப்புக்கள் அனைத்தையும் அவரிடத்தில் தோழிகள் ஒப்படைத்து விட்டார்கள். எனவே அவரால் வராமல் தப்பிக்க முடியாது.  நான் சொன்னது போலவே அவர் வந்தவுடன் அவர் கொண்டு வந்துள்ள பரிசுப் பொருட்களில் ஒன்றை அணிந்து கொண்ட பின்னர் திருமண பதிவேட்டில் கையெழுத்திட்டேன்.  


திருமணம் முடிந்த ஒரு மாத காலத்தில் என் கணவர் மீண்டும் வெளி நாட்டுக்குப் புறப்பட்டு விட்டார். எனக்கு திருமணம் ஆகியும் கூட கணவர் வெளி நாட்டில் இருப்பதன் காரணமாக தனிமை. மீண்டும் ஒரு வசந்தம் என்பது போல் பழைய படி ராஜா ராணி தட்டில் அவருடன் உணவருந்த ஆரம்பித்தேன். மாலை வேளையில் வழக்கம் போல் அவருடன் உல்லாசமாக நடந்து செல்ல ஆரம்பித்தேன். 


எனக்கு திருமணம் ஆனதே மறந்து போய் விட்டது. காரணம் என் கணவர் திருமணத்திற்கு ஒரு மாத விடுமுறையில் வந்து உல்லாசமாக இருந்து விட்டு திரும்பிச் சென்று விட்டார். அந்த ஒரு மாத காலத்தில்  கூட உறவினர்களைப் பார்க்கவும் நண்பர்களைப் பார்க்கவும் எனச் சொல்லி வெளியே சென்று விட்ட காரணத்தால் கணவருடன் பேசவே முடியாது.  எனக்கும் விருப்பம் இருக்காது. முதல் குழந்தை பிறந்ததற்கே பார்க்க வராமல் வழக்கம் போல் ஓராண்டிற்குப் பின்னர் தான் வருகை தந்தார்.


அவருக்கு பெற்றோர் நிச்சயம் செய்த பெண்ணுடன் திருமணம் நடந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அச்சமயம் என்னிடத்தில் மாலையைக் கொடுத்து அவரது மனைவி கழுத்தில் அணிவிக்குமாறு அங்கு குழுமி இருந்தவர்கள் கேட்டுக்கொள்ள நான் மாலையுடன் அருகில் சென்ற சமயம் சில தோழிகள் பழைய ஞாபகத்தில் அவர் கழுத்தில் போட்டு விடாதே என கலாட்டா செய்தனர். எனக்கு அங்கேயே கண்ணீர் வந்து விட்டது. 


திருமணத்திற்குப் பின்னர் அவர் வெளியூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். வருடத்தில் ஒரு முறை என்னைப் பார்க்க அவர் கட்டாயம் அலுவலகத்திற்கு வருவார். நான் திருமணம் ஆன பின்னரும் கூட வெளிநாடு செல்லாத காரணத்தால் அலுவலகத்தில் பணியாற்றியபடி தாய் வீட்டிலேயே தங்கி விட்டேன். ஒரு நாள் என்னைப் பார்க்க அவர் வந்த சமயத்தில் அவரிடத்தில் என்னுடைய வங்கிக் கணக்கு பாஸ் புத்தகத்தை காட்டி அதில் உள்ள 6.5 லட்சம் ரூபாய்க்கு நான் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டு மனைக்கு அடுத்த மனையை அவர் பெயரில் வாங்க கேட்டுக் கொண்டேன். 


நான் திருமணம் செய்து கொள்ள முடியாத அவர் எப்போதும் என்னருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி விட்டது. ஒன்றாக Living Together  வாழ்க்கை நடத்துவதற்காக அல்ல. எப்போதும் அவர் அருகே இருக்க வேண்டும். அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என எண்ணினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். அவர் ஒற்றை வருமானத்தில் கஷ்டப்படுவது எனக்கு மிகுந்த மனக் கஷ்டத்தைக் கொடுத்தது.


எனது குழந்தை காணாமல் போன சமயம் வெளி நாட்டிலிருந்து வந்த என் கணவர் 15 நாட்கள் தங்கி உல்லாசம் அனுபவித்து விட்டு குழந்தை கிடைப்பதற்கு முன்னர் வெளி நாடு திரும்பி விட்டார். ஆனால் அவருக்கு எழுதிய கடிதத்தில் I want to weep on your laps என ஒரே வாக்கியம் எழுதினேன். தமிழ் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் கையெழுத்திட்டு அனுப்பிய மறு நாள் வந்து அவரது உறவினர் வீட்டில் தங்கி என்னை அலுவலகத்தில் சந்தித்த பின்னர் காவல் துறை உயர் அலுவலரிடம் அழைத்துச் சென்று ஐந்து நாட்களில் குழந்தை கிடைத்த பின்னர் ஊருக்குத்  திரும்பினார். என் கணவரிடத்தில் செலுத்தும் அன்பை விட அவரிடத்தில் செலுத்தும் அன்பு பன்மடற்கு பெருகி விட்டது


நானும் அவரும் திருமண பந்தத்தில் இணைய முடியாமல் Living Together என்னும் கலாச்சாரத்தையும் பின்பற்றாமல் இருந்த சமயத்திலும் கூட என் குழந்தை கிடைப்பதற்கு அவர் செலுத்திய அக்கறை எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ராஜா தட்டில் தான் நான் இன்று வரையில் சாப்பிட்டு வருகின்றேன். 


நான் அவரிடத்தில் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 6.5 லட்சத்திற்கு எனது வீட்டு மனைக்கு அடுத்த படியாக அமைந்துள்ள வீட்டு மனையினை வாங்கச் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் கட்டாயம் மனமாற்றம் ஏற்படும் சமயம் அவர் என்னருகில் வரக்கூடும் என்பதற்காக நானே என் பெயரில் அந்த மனையினை வாங்கி விட்டேன். எனது எதிர்பார்ப்பு வீணாகி விட்டது. 


பிற்காலத்தில் நான் சொந்தமாக பல நான்கு சக்கர வாகனங்களை வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்த சமயம் அவருக்காக நான் வாங்கிய மனை வாகனங்கள் நிறுத்தத் தான்  பயன்பட்டது. அவருக்காக நான் வாங்கிய வீட்டு மனையில் பல நான்கு சக்கர வாகனங்கள் இருந்த போதிலும் அவர் இரு சக்கர வாகனத்தில் தான் பயணம் செய்கின்றார் என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகுந்த கவலையாக இருக்கின்றது. அவர் வாழ வேண்டிய இடம் எனது கண்களில் தெரியும் சமயம் அவரது பிரிவு எனக்கு துயரத்தைக் கொடுக்கின்றது.


ராணித் தட்டு அவர் ஞாபகமாக ஷோ கேசில் கேடயம் போல  பத்திரமாக இருக்கின்றது. யாரையும் தொடக்கூட அனுமதிக்க மாட்டேன்.  அந்தத் தட்டினை கையில் எடுத்துப் பார்க்கும் போது ராணித் தட்டில் உள்ள உருவம் எப்படி எப்போதும் இளமையாக இருக்கின்றதோ அப்படி  எனது மனம் கன்னிப் பெணணின் வயதிற்கு மாறி விடும். எனக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்படும் பேதெல்லாம் அந்தத் தட்டினை தடவிக் கொண்டேயிருந்தால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும். ஏனெனில் அவர் கரங்கள் பட்ட தட்டு. 


திருமணத்திற்குப் பின்னர் இருவரது அந்தஸ்தில் நிறைய வித்தியாசம். நான் கோடீஸ்வரியாக மாறி நம் இருவருக்கும் உள்ள வாரிசுகளுக்கு திருமண வயது வந்த பின்னரும் கூட ராஜா ராணித் தட்டுகளில் நானும் அவரும் உணவருந்திய சமயம் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் இருந்த சந்தோஷத்திற்கும் நிஜ வாழ்க்கையில் நான் அனுபவிக்கும் சந்தோஷத்திற்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசத்தினை எண்ணும் போது எனக்கு அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்னும் ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எனக்கு உறவுகள் இருக்கின்றன. எத்தனை உறவுகள் இருந்த போதிலும் நான் அவர் மீதும் அவர் என் மீதும் செலுத்தியது போன்ற உள்ளன்பு இல்லை. 


இல்லை. இல்லை. இல்லவே இல்லை.



Friday, July 16, 2021

Betel Garland and Vadai Garland : வெற்றிலை மாலையும் வடை மாலையும்

வெற்றிலை மாலையும் வடை மாலையும்


பசுவினைத் தேடி கன்று ஓடிப் பார்த்திருக்கின்றோம். ஆனால் கன்றினைத் தேடி பசு ஓடுவது என்பது எதிர்பார்த்திராத ஒன்று. பசுவினை ஒரு இடத்தில் கட்டிப் போட்டு விட்டு பசுவினிடத்தில் பால் கறக்குமுன்னர் கன்றினை அவிழ்த்து விடுவார்கள். கட்டிப் போட்ட இடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கன்று பசுவின் மடியிருந்து சுரக்கும் பாலினை அருந்துவதற்காக தாய்ப்பசு எங்கிருந்தாலும் அந்த தாய்ப் பசுவினைத் தேடி வேக வேகமாக துள்ளிக் குதித்து பாய்ந்து ஓடும். இது இயற்கை. 


ஆனால் முன்பின் தெரியாத ஒரு கன்னிப் பெண்ணைப் பார்க்க  அந்தப் பெண்ணின் தாயாரை விட சற்று அதிகம் வயது கொண்ட வேறு ஒரு மங்கை ஆசைப்படுவது என்பது ஆச்சர்யம். 


ஆமாம். ஒரு கன்னிப்பெண் தமக்குத் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்பதற்காக வாரா வாரம் சனிக்கிழமையன்று அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வெற்றிலை மாலையுடன் வருவாள். அவளைப் பார்க்க இன்னுமொரு தாய் வேக வேகமாக அந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த கோவிலுக்கு சென்றடைவாள். இருவருக்கும் எந்தவிதமான  உறவு முறையும் கிடையாது. சொந்தமும் இல்லை. 


அந்தப் பெண்ணை முதல் முறையாகப் பார்க்கும் போதே பிடித்து விட்டது. காரணம். அழகான பெண். அடக்கமான பெண். அந்தப் பெண் பய பக்தியுடன் சாமி கும்பிடும் முறை மற்றும் குனிந்த தலை நிமிராமல் பிரகாரத்தினை வலம் வரும் விதம். முதல் முறை பார்த்ததிலிருந்து வாரா வாரம் அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காகவே கோயிலுக்குச் சென்று வருவது அந்த மங்கைக்கு வாடிக்கையாகி விட்டது.


அந்த மங்கைக்கு இல்லாத நோய்கள் இல்லை. வீட்டில் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள். இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமல் யாரையும் கூட அழைக்காமல் தன்னந்தனியே கோயிலுக்கு நடந்து சென்று வருவது சில நாட்களாக வாடிக்கையாகி விட்டது. அதற்கெல்லாம் ஒரே காரணம் அழகான ஒரு பெண். அடக்கமான ஒரு பெண். 


அந்தப் பெண்  வரும்போது ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துபடி செய்து அர்ச்சகர் சடாரி வைக்கும் சமயம் பணிவுடன் தலை குனிந்தவாறு நின்று கொண்டு பின்னர் பிரசாதம் கொடுக்கும் சமயம் பயபக்தியுடன் பெற்றுக் கொள்ளும் அழகைக் காண கண் கோடி வேண்டும். 


அவளை கோவிலில் காண்பது அன்று ஒன்பதாவது முறை. அந்தப் பெண் அர்ச்சகரிடத்தில் வெற்றிலை மாலையுடன் பூஜைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கூடையினைக் கொடுத்தாள். அர்ச்சகர் யார் பெயருக்கு அர்ச்சனை எனவும் ராசி நட்சத்திரம் மற்றும் கோத்திரம் ஆகியவற்றைக் கேட்டதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் சாமி பெயருக்கு எனச் சொன்னாள்.


அந்தச் சமயத்தில் அருகில் இருந்த முன்பின் தெரியாத அந்த மங்கை அந்தப் பெண்ணிடத்தில் சாமி பெயருக்கு என்று அர்ச்சனை செய்வதற்குப் பதிலாக யாருக்காக அர்ச்சனை என்று சொல்ல வேண்டும் எனச் சொன்னதற்கு சாமி பெயருக்கு அர்ச்சனை என்றால் சாமிக்குப் புரிந்து விடும் எனச் சொன்னாள். அவ்வாறு அந்த மங்கை அறிவுறுத்திமைக்கான காரணம் அந்தப் பெண்ணின் பெயரினைத் தெரிந்து கொள்ளும் ஆவல் தான். 


வழிபாடு முடிந்த பின்னர் அர்ச்சனைத் தட்டினை பெற்றுக் கொண்டு அந்தப் பெண் சற்று தூரத்தில் சென்று அமர்ந்தாள். அந்தப் பெண் அமர்ந்தவுடன் அவரைத் தொடர்ந்து வந்த மங்கை அருகில் சென்று அமர்ந்து கொண்டு அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். 


அப்போது அந்தப் பெண் தமது பெயர் மற்றும் விலாசம் மற்றும் தாய் தந்தையர் விவரம் மற்றும் தொழில் ஆகியவற்றைக் கூறி முடித்தாள்.  அதன் பின்னர் அந்த மங்கை அந்தப் பெண்ணிடத்தில் வாராவாரம் சனிக்கிழமையன்று தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தமைக்கான காரணம் கேட்டதற்கு தமக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சென்று வெற்றிலை மாலை சாத்துபடி செய்து ஒன்பது வார முடிவில் அர்ச்சனை செய்ய வேண்டுமென ஜோதிடர் சொன்னது தான் காரணம் எனத் தெரிவித்தாள்.

https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/betel-garland-and-vadai-garland.html




அனைத்தையும் பொறுமையாகக் கேட்டு விட்டு அந்த மங்கை அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடுத்த நாள் காலையில் வரப் போவதாகவும் பெற்றோரிடத்தில் தெரிவிக்குமாறும் சொல்லி விட்டு தமது வீட்டு விலாசம் அடங்கிய விசிட்டிங் கார்டினை சொடுத்தார்.


அப்போது அந்தப் பெண் அந்த விசிட்டிங் கார்டினைப் பெற்றுக் கொண்டு மிக்க சந்தோஷம். நான் என் பெற்றோரிடத்தில் தெரிவிக்கின்றேன். கட்டாயம் வீட்டிற்கு வாருங்கள். உங்கள் வருகைக்காக நானும் எங்கள் வீட்டாரும் காத்திருப்போம் என புன்னகையுடன் தெரிவித்து விட்டு இருவரும் கோவிலிலிருந்து புறப்பட்டனர். 


மறு நாள் காலையில் மனதில் நிறைந்த ஆசைகளுடன் அந்த மங்கை சொகுசு காரில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற சமயம் பலத்த வரவேற்பு காத்திருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்களை வரவேற்று உபசரித்து அமருமாறு கேட்டுக் கொண்டனர். அமர்ந்தவுடன் அந்தப் பெண்ணின் வீட்டார் எதிரே நின்று கொண்டார்கள். 


அந்த மங்கை முதலில் அனைவரும் அமர்ந்து கொள்ளுங்கள் எனக்கூறி அனைவரும் அமர்ந்து முடித்த பின்னர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நான் இந்த ஊரில் ஜவுளிக் கடை மற்றும் நகைக்கடை வைத்துள்ளேன். சொந்தமாக ஒரு மில் உள்ளது. இது போக வீடு வாசல் கார் பங்களா விவசாய விளை நிலங்கள் என நிறைய சொத்துக்கள் உள்ளன. எனக்கு ஒரே மகன் இருக்கின்றான். அவனுக்கு திருமணம் செய்து அழகு பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் திருமணம் தள்ளிக் கொண்டே போகின்றது. எதற்கு என்றே தெரியவில்லை.


நான் பார்ப்பதற்கு அழகாக ஆரோக்கியமானவள் போலத் தோற்றம் அளித்தாலும் எனக்கு நிறைய நோய்கள் இருக்கின்றன. இரத்தக் கொதிப்பு சர்க்கரை நோய் இதய அடைப்பு சிறு நீரகத்திலும் நுரையீரலிலும் கோளாறு என பலப்பல நோய்கள். எனது உயிர் என் உடலை விட்டு எப்போது வேண்டுமானாலும் பிரிந்து விடலாம். அதற்கு முன்னர் எனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என உங்கள் மகளுடன் சேர்ந்து அவளுக்குத் தெரியாமல் நான் ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொண்டேன்.


உங்கள் மகளை முதன் முதலாக ஆஞ்சநேயர் கோயிலில் பார்த்த சமயம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எனது வலிகள் மற்றும் நோய்கள் எதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 9 வாரங்கள் அவள் வரும் சமயம் நானும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்துள்ளேன்.  9-வது வாரம் அர்ச்சனை செய்யும் சமயம் ஜோதிடர் சொல்படி கோயிலுக்கு வந்து செல்வதாகத் தெரிவித்தார். 


அதன் பின்னர் ஜாதகத்தில் ஏதேனும் குறைகள் இருக்கின்றதா எனவும் பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருக்கின்றதா எனவும் கேட்டதற்கு பெண்ணின் ஜாதகத்தில் எவ்விதமான தோஷங்களும் இல்லை என்றும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஒன்பது வாரங்கள் சாத்துபடி செய்து முடித்த பின்னர் நல்ல வரன் அமையும் என ஜோதிடர் சொன்னதாகத் தெரிவித்தனர்.


இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் சமயம் இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தனர். மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சாப்பிட்டு விட்டு அவர்கள் கொடுத்த காபியினையும் அருந்தினார்கள்.


நீண்ட நேரம் பேசிய பின்னர் காரில் வந்த அந்த மங்கை பெண்ணின் குடும்பத்தாரிடத்தில் தம்முடன் ஜோதிடர் வீட்டிற்கு பெண்ணின் ஜாதகத்துடன் வருமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் பெண்ணின் ஜாதகத்துடன் ஜோதிடர் வீட்டிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு புறப்பட்டனர். 


ஜோதிடர் வீட்டில் வரவேற்பு பலமாக இருந்தது. ஜோதிடர் வீட்டில் பெண்ணின் ஜாதகத்தை ஜோதிடரிடத்தில் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு அந்த மங்கை இரண்டு ஜாதகங்களைக் கொடுத்தார்கள். அவர்களாகவே தொடர்ந்து பேசினார்கள்.


எனக்கு ஒரே மகன். இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் தள்ளிக் கொண்டே போகின்றது. மகனிடத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு சொன்னால் வெளி நாடு செல்ல வேண்டும். இன்னும் உயரத்திற்கு வர வேண்டும். இன்னும் முன்னேற வேண்டும் எனச் சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கின்றான். திருமணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் எனக்கு உடல் நிலை பாதிக்கப் படுகின்றது எனச் சொன்னார். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ஜோதிடர் பலன் சொல்ல ஆரம்பித்தார்.


ராமனுக்காக ராமரது கணையாழியுடன் சீதையை அசோக வனத்தில் சந்தித்த அனுமன் தாம் ராமதூதன் எனச்சொல்லி வணங்கினார். சீதைக்கு அளவில்லாத ஆனந்தம். எனவே உடனே சீதை அனுமனை ஆசீர்வதிக்க விரும்பினாள். ஆசீர்வாதம் செய்வதற்கு அட்சதை அல்லது மலர்கள் தேவை. ஆனால் சீதை இருந்த அசோகவனத்தில் இலைகள் தான் இருந்தன. அந்த இலைகளில் சிலவற்றை கிள்ளியெடுத்து சீதை அனுமனை ஆசீர்வதித்த சமயம் இனி எல்லாம் வெற்றியே எனச் சொன்னார். 


சீதை அனுமனிடத்தில் ராமருடன் இலங்காபுரிக்கு வந்து இலங்கேஸ்வரனை வெற்றி கொண்டு தம்மை மீட்பதற்காக தாம் இந்த இலை கொண்டு ஆசீர்வதித்த காரணத்தால் இந்த இலைக்கு இனிமேல் வெற்றி இலை எனப் பெயர் சூட்டுகின்றேன் எனச் சொன்னார். எனவே வெற்றி தரும் இலையான வெற்றிலையை கொண்டு மாலையினை உருவாக்கி அந்த வெற்றிலை மாலையினை ஆஞ்சநேயருக்கு அணிவித்தால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் எனவும் திருமணம் போன்ற சடங்குகளில் வெற்றிலை தாம்பூலம் மாற்றித் தான் நிச்சயதார்த்தம் செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார். அந்த காரணத்தால் தான் ஆஞ்சநேயருக்கு 9 வாரங்கள் வெற்றிலை மாலை அணிவிக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். பெண்ணின் ஜாதகத்தில் எந்த விதமான தோஷங்களும் இல்லை எனச் சொன்னார். 


அதன் பின்னர் அந்த மங்கையின் ஜாதகத்தினையும் அவரது மகனது ஜாதகத்தையும் ஆராய்ந்த ஜோதிடர் பலன் மற்றும் பரிகாரம் சொல்ல ஆரம்பித்தார்.


பையன் ஜாதகத்தில் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்னும் ஆசை இருக்கின்றது. அதற்குக் காரணம் ராகு பகவான். பையனின் ஜாதகத்தில் ராகு தோஷம் இருக்கின்றது. இந்த தோஷத்திற்கு ராகு பகவானை திருப்திப்படுத்த ராகுவுக்குப் பிடித்தமான நவதானியங்களில் ஒன்றான உளுந்தினால் வடை செய்து ஆஞ்சநேருக்கு வடை மாலை சாத்துபடி செய்தால் திருமணம் விரைவில் தடையின்றி நடைபெறும். ராகு தோஷத்திற்கு ராகுவை நேரடியாக வழிபடலாமே எனக் கேட்கலாம். அதற்கும் காரணம் உண்டு.


வாயு புத்திரனான அனுமன் சூரியனை பழம் எனக்கருதி அதனை புசிக்கும் ஆவலில் சூரியனை நோக்கி பயணித்த சமயம் ராகு பகவான் கிரஹணம் பிடிப்பதற்காக சூரியனை நோக்கி நெருங்கி வருகின்றார். ஆனால் அனுமன் வேகத்தை ராகுவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  


எனவே ராகு பகவான் அனுமனிடத்தில் ராகு பகவானுக்குப் பிடித்தமான உளுந்தினைக் கொண்டு வடை மாலை செய்து அனுமனுக்கு அணிவித்தால் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்குவதாக உறுதி அளித்தார்.


நாக தோஷமோ அல்லது சர்ப்ப தோஷமோ அல்லது காலசர்ப்ப தோஷமோ இருந்தால் காளஹஸ்தி அல்லது திருநாகேஸ்வரம் போன்ற கோயில்களுக்குச் சென்று வரலாம். ஆனால் இந்த ஜாதகக் காரர் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துபடி செய்து வழிபட்டாலே போதும். திருமணத் தடைகள் நீங்கிவிடும். 


இதற்குப் பின்னர் அந்த மங்கையின் நோயினைக் குணப்படுத்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்து அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதற்குக் காரணமாக இராமாயணத்தில் ராமனுடன் சேர்ந்து அனுமன் போர்ப்படைத் தளபதியாக சென்ற சமயம் அனுமன் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததனை சீதாப்பிராட்டி கண்டு அனுமனின் வெப்பம் தணியவும் காயங்கள் ஆறுவதற்கும் வெண்ணையினை சீதாப்பிராட்டி தடவி விடச் சொன்னார்கள். எனவே உடலில் உள்காயங்கள் அல்லது வெளிக்காயங்கள் மற்றும் உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின் அனுமனுக்கு வெண்ணெய் காப்பு செய்வித்தால் பூரணமாக நலம் பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.


அத்தனையும் கேட்டு முடித்த அந்த மங்கை ஜோதிடர் சொன்ன பரிகாரங்களை ஒரு வார காலத்திற்குள் செய்து முடித்து விடப் போவதாகவும் அதற்குப் பின்னர் வரப் போகின்ற சுப முகூர்த்த நாளன்று திருமணம் செய்வதற்கு ஜாதகப் பொறுத்தம் பார்க்கும் படியும் கேட்டுக் கொண்டார். 


அதற்கு ஜோதிடர் மணப்பெண்ணின் வீட்டாருக்கு சம்மதம் இருந்தால் பொருத்தம் பார்த்துச் சொல்வதாகச் சொன்னவுடன் பெண்ணின் வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். உடனே ஜோதிடர் இரண்டு ஜாதகங்களையும் ஆராய்ச்சி செய்து ஜாதகப் பொருத்தம் நன்றாக இருப்பதாகவும் இந்தப் பெண் சென்று விளக்கேற்றும் இடத்தில் செல்வம் பெருகும் எனவும் சொன்னார். 


பெண் பார்க்கும் படலம் மற்றும் மாப்பிள்ளை அறிமுக படலம் அனைத்தும் ஒரு பக்கம் நடைபெற்று வந்த அதே வேளையில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்தல் மற்றும் வெண்ணைக் காப்பு செய்து முடித்து விட்டார்கள். அதன் பின்னர் ஒரு வார காலத்தில் திருமண வைபவம் மிக மிக விமரிசையாக ஊரே போற்றும் படி நடைபெற்றது. இது தான் அனுமனுக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவிப்பதனால் ஏற்படும் பலன்கள். அனுமனுக்கு வெண்ணை காப்பு செய்தால் அனைத்து நோய்களும் விரைவில் குணமாகிவிடும் என்பது தனிச்சிறப்பு.


ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இதயக் கோளாறு நுரையீரல் மற்றும் சிறு நீரக கோளாறு என அத்தனை நோய்களையும் வைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமல் யாரையும் துணைக்கு அழைத்து வராமல் தன்னந்தனியே அந்தப் பெண்ணை பார்க்கும் சமயம் அந்தப் பெண் தமக்கு மருமகளாக வரவேண்டும் என எதிர் பார்த்ததற்கும் ஜோதிடரிடத்தில் ஜாதகத்தைக் காட்டிய பின்னர் ஜோதிடர் சொன்னபடி வழிபாடுகள் முடிந்த பின்னர் அதே பெண் தமக்கு மருமகளாக வந்து தம்மிடத்தில் ஒரு மகள் போல அன்பு செலுத்தி வரும் நிஜ வாழ்க்கையினையும் நினைக்கும் போது புல்லரிக்கின்றது. உடல் நிலையில் ஏற்பட்டுள்ள தேக ஆரோக்கியத்தைக் காணும் போது ஆச்சர்யமாக இருக்கின்றது.




Thursday, July 15, 2021

Marriage Blessings From God : கடவுளிடமிருந்து திருமண ஆசீர்வாதம்

கடவுளிடமிருந்து திருமண ஆசீர்வாதம்


அன்று வெள்ளிக் கிழமை. கோயிலில் நிறையக் கூட்டம். அர்ச்சகர்கள் பக்தர்களிடத்தில் அர்ச்சனைத் தட்டுக்களையும் அர்ச்சனைக் கூடைகளையும் பெற்றுக் கொண்டு யார் பெயருக்கு அர்ச்சனை அவர்களின் நட்சத்திரம் மற்றும் கோத்திரம் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் சென்று அர்ச்சனை செய்து அர்ச்சனை தட்டுக்களையும் அர்ச்சனைக் கூடைகளையும் திரும்பக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.


அப்போது ஒரு தம்பதியினர் அர்ச்சகரிடத்தில் அவர்கள் கொடுத்த அர்ச்சனைத் கூடை மாறியிருப்பதாகவும் அவர்கள் கொடுத்த அர்ச்சனைக் கூடையில் மலை வாழைப்பழம் வைத்திருந்ததாகவும் அர்ச்சனைக்குப் பின்னர் தம்மிடம் திரும்ப வழங்கப்பட்ட அர்ச்சனைக் கூடையில் ரஸ்தாளி வாழைப்பழம் இருப்பதாகவும் சொல்லி வந்தனர்.

https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/marriage-blessings-from-god.html









அச்சமயம் அர்ச்சகர் கோயிலில் கருவறையில் அர்ச்சனைக்குக் கொடுக்கப்படுகின்ற அர்ச்சனைத் தட்டுகள் அல்லது அர்ச்சனைக் கூடைகள் இடம் மாறி விடுமேயானால் வீட்டில் சுப காரியங்கள் விரைவில் நடக்கும் எனச் சொன்னார். அர்ச்சகர் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அர்ச்சனைக் கூடையுடன் மூலஸ்தானைத்தை விட்டுச் விலகிச் சென்ற தம்பதியர் திரும்ப வந்து அதே போலச் சொன்னார்கள். 


அர்ச்சகர் உடனே தமக்கு வந்த இடையூறு அகன்று விட்டதாகச் சொல்லி இரண்டு குடும்பத்தாரிடத்திலும் அர்ச்சனைக் கூடைகளை பெற்றுக் கொண்டு அவரவர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நிம்மதிப் பெருமூச்சு விட்ட அர்ச்சகர் இரு குடும்பத்தாரிடத்திலும் சற்று நேரம் பேசலாமா என அனுமதி கேட்க இருவரும் ஒப்புதல் தெரிவித்தனர். 


இரண்டு குடும்பத்தாரும் அவரிடத்தில் நீங்கள் எங்களுடன் பேசும் சமயம் கர்ப்பக்கிரஹத்தில் அர்ச்சனை யார் செய்வார்கள் எனக் கேட்டதற்கு அர்ச்சனைக் கூடை மாறிய பஞ்சாயத்தினை அரை மணி நேரத்தில் முடித்துக் கொண்டு திரும்ப வருமாறும் அது வரையில் மற்றவர்கள் பணிகளை கவனிப்பதாகவும் சொல்லி விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.


அதன் பின்னர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர். அர்ச்சகர் இருவரிடத்திலும் யார் பெயரில் அர்ச்சனை செய்தீர்கள் எனவும் என்ன காரணத்திற்காக எனவும் சொல்லுமாறு கேட்டார். 


அதற்கு முதல் தம்பதியினர் தமது மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பதாவும் இரண்டாவது தம்பதியினர் தமது மகனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அச்சமயம் அர்ச்சகர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் பெயர் ராசி மற்றும் நட்சத்திரம் தெரிவிக்குமாறு சொன்னார்.


அப்போது தான் தெரிய வந்தது. மணமகன் மற்றும் மணமகள் இருவரது ஜாதகங்களும் இரண்டு கூடைகளிலும் வைக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது என்பது. இரண்டு வீட்டாரும் தமது வாரிசுகளின் ஜாதகங்களை அர்ச்சகரிடம் கொடுக்க அர்ச்சகர் அந்த இரண்டு ஜாதகங்களையும் பொருத்தம் பார்த்து விட்டு இரண்டு ஜாதகங்களுக்கும் 9 பொருத்தங்கள் சரியாக பொருந்தி இருக்கின்றது எனவும் வயது வித்தியாசம் மணமகளை விட மண மகனுக்கு 3 அதிகம் இருப்பதாகவும் இருவருக்கும் மணமுடித்து வைக்கலாம் எனவும் தெரிவித்தார்.


அதன் பின்னர் அர்ச்சகர் அவர்களிடத்தில் அர்ச்சனைக் கூடை மாறியதையும் அதனுள் இரண்டு ஜாதகங்களும் இருந்து அர்ச்சனைக் கூடைகள் மாறியதையும் பார்க்கும் போது உங்கள் வாரிசுகள் இருவரையும் சேர்த்து வைத்து சாமி முடிச்சு போட்டு விட்டார் என்பதனைத் தெரிவித்து விட்டு இரண்டு வீட்டாரும் ஜாதகப் பரிமாற்றும் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


அதன் பின்னர் மணமகன் குடும்பத்தார் கொண்டு வந்த ஜாதகத்தினை மணமகள் வீட்டாரிடத்தில் கொடுத்து விட்டு மணமகள் வீட்டார் கொண்டு வந்த ஜாதகத்தினை மணமகன் வீட்டார் பெற்றுக் கொண்டனர். அதற்குப் பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து மணமகன் வீட்டார் மணமகள் வீட்டிற்கு நேரடியாகச் சென்று மணமகள் என்ன படித்திருக்கின்றாள். என்ன பணி செய்கின்றாள். எங்கு வேலை செய்கின்றாள் என விசாரித்தனர். 


மணமகள் வீட்டார் தமது மகள் மருத்துவம் படித்து விட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் டாக்டராகப் பணியாற்றி வருவதாகவும் திருமண விவரங்கள் மணமகளுக்கு தெரியப் படுத்திய பின்னர் ஜாதகத்தை கோயிலில் வைத்து பூஜை செய்ததாகவும் தெரிவித்தனர்.


மணமகன் வீட்டார் தமது மகன் பொறியியல் படிப்பு படித்து விட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்  சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வருவதாகவும் திருமண விவரங்கள் மணமகனுக்கு தெரியப்படுத்திய பின்னர் ஜாதகத்தை கோயிலில் வைத்து பூஜை செய்ததாகவும் தெரிவித்தனர். 


இரண்டு குடும்பத்தாருக்கும் தமது வாரிசுகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. மணமகன் வீட்டார் மிக்க சந்தோஷத்துடன் அவர்களது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். 


மணமகன் வீட்டார் தமது மகனிடத்தில் திருமணத்திற்கு ஒரு பெண்ணின் ஜாதகம் மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகவும் காசு பணம் அந்தஸ்து அனைத்திலும் சமமானவர்களாக சம்மந்தி வீட்டார் இருப்பதாகவும் தெரிவித்தனர். மணப்பெண்ணை இன்னும் பார்க்கவில்லை எனவும் மணப்பெண்ணை பார்த்து மணப்பெண்ணைப் பிடித்திருந்தால் இந்தியாவுக்கு பெண் பார்க்க வர வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தனர். மகன் சரியென ஒப்புக் கொண்டான்.


அதே போல மணமகள் வீட்டார் தமது மகளிடத்தில் திருமணத்திற்கு ஒரு மணமகனின் ஜாதகம் மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகவும் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டுச் சென்று விட்டதாகவும் மணப் பெண்ணை எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரச் சொல்லுங்கள். பெண் பிடித்திருந்தால் உடனே நிச்சயதார்த்தம் செய்து திருமணத்தை முடித்து விடலாம் எனவும் தெரிவித்தார்கள். அதற்கு அவர்களின் மகள் திருமணம் தொடர்பாக தாம் இந்தியாவிற்கு விரைவில் வருவதாக  தெரிவித்தாள். அதே போல இரண்டு மூன்று நாட்களில் பெண் இந்தியா வந்தடைந்தாள்.


ஒரு வார காலத்தில் மணமகள் வீட்டிற்கு மணமகன் வீட்டார் முறையாகச் சென்று பெண் பார்த்து வந்தனர். பெண்ணை மணமகன் வீட்டாருக்கு மிகவும் பிடித்து விட்டது. மணமகன் வீட்டார் விரைவில் மாப்பிள்ளையுடன் சேர்ந்து வந்து பெண் பார்க்கப் போவதாகவும் இருவரும் சரியெனச் சொல்லி விட்டால் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் முடித்து விடலாம் எனவும் தெரிவித்தனர். 


இல்லம் திரும்பிய மணமகன் வீட்டாருக்கு ஒரே ஆச்சர்யம். மணப் பெண்ணைப் பார்த்து விட்டுத் திரும்பிய சமயம் தமது மகன் வெளி நாட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வீட்டிற்கு வந்திருப்பது அறிந்து மிக்க சந்தோஷம். மகனிடத்தில் தாம் பார்த்து வந்த பெண் பற்றித் தெரிவித்து அந்தப் பெண்ணை உற்றார் உறவினர் சொந்தங்களுடன் சேர்ந்து போய்ப் பார்த்து மாப்பிள்ளையைக் காட்டிய பின்னர் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைக்கப் போகின்றோம் எனச் சொன்னார்கள். 


அச்சமயம் வெளி நாட்டிலிருந்து வந்த மகன் ஒரு பெண்ணின் போட்டோவைக் காட்டி அந்தப் பெண்ணை தாம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் வேறு எந்தப் பெண்ணும் வேண்டாம் என்றும் தெரிவிக்க பெற்றோர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.  இருந்தாலும் சமாளித்துக் கொண்டு வருகின்ற ஞாயிற்றுக் கிழமையன்று அனைவரும் சேர்ந்து ஒன்றாகப் போய் மணமகளைப் பார்க்கலாம் எனவும் மணமகளைப் பிடிக்கவில்லையெனில் போட்டோவில் உள்ள பெண்ணை யார் என விசாரித்து திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்தனர். 


ஞாயிற்றுக் கிழமை வந்தது. அனைவரும் பெண் பார்ப்பதற்கு பெண்ணின் வீட்டிற்குச் சென்றனர். மாப்பிள்ளையும் கூடச் சென்றார். மாப்பிள்ளை வீட்டில் நுழையும் சமயம் அரை மனதுடன் இல்லத்தில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் அனைவரும் சேர்ந்து மணப்பெண்ணை அழைத்து வாருங்கள் எனச் சொல்ல மணப்பெண் சர்வ அலங்காரத்துடன் வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தாள். 


மணப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரே ஆச்சர்யம். ஆம் இருவரும் இந்தியாவுக்கு வரும் சமயம் ஒரே விமானத்தில் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டே பயணம் செய்துள்ளனர். செல்பி போட்டோ கூட எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த போட்டோவைத் தான் மணமகன் தனது பெற்றோரிடத்தில் காண்பித்து அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லி இருக்கின்றார். 


மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டார் அனைவரும் குழுமி இருந்த கூட்டத்தில் மணமகனின் தாயார் இந்தப் பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்து வைக்கட்டுமா அல்லது நீ போட்டோவைக் காண்பித்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டாயே அந்தப் பெண்ணைப் பார்க்கலாமா எனக் கேட்டார். 


அச்சமயத்தில் மணமகள் பக்கம் உள்ள உற்றார் உறவினர் சுற்றத்தினர் மணமகன் வேறு ஒரு பெண் மீது ஆசை வைத்திருக்கும் போது எப்படி எங்கள் வீட்டுப் பெண்ணை பெண் பார்க்க வந்தீர்கள் என காட்டமாக கேட்டனர். அதற்கு மணமகனின் தாயார் பொறுங்கள் முதலில் என் மகன் என்ன சொல்கின்றானோ அதனைக் கேட்டு உங்களுக்குப் பதில் சொல்கின்றேன் எனச் சொன்னார். 


அதனைக் கேட்ட மணமகன் இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் சம்மதிக்கின்றேன் எனத் தெரிவித்தார். இருந்தாலும் மணமகள் வீட்டார் விடவில்லை. அந்த போட்டோவை முதலில் எங்களிட்த்தில் காட்டுங்கள் என வற்புறுத்தினார்கள். அனைவரது வேண்டுகோளுக்கிணங்க அந்த போட்டோவை காட்டினர். ஆமாம் இருவரும் ஒரே விமானத்தில் வரும் சமயம் எடுத்துக் கொண்ட போட்டோ தான் அது. 


மணமகள் வெளிநாட்டிலிருந்து நேரடியாக வீட்டிற்கு வந்து விட்டாள். மணமகன் இந்தியாவிற்கு வந்து டெல்லியிலும் மும்பையிலும் உள்ள கிளை அலுவலகங்களுக்குச் சென்ற பின்னர் வீட்டிற்கு வந்துள்ளான். எனவே பெண் பார்த்து முடியும் வரையில் மணமகன் வீட்டிற்கு வருவதில் தாமதம். அன்றைய தினமே நிச்சய தாம்பூலம் செய்து கொண்டு அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/marriage-blessings-from-god.html


அந்த முகூர்த்தத்திற்கு கோயிலில் அர்ச்சனைக் கூடை மாறியதன் காரணமாக அறிமுகமான அர்ச்சகர் ஹோமங்களும் யாகங்களுகம் செய்து திருமண சடங்கினை செய்து வைத்தார். இறைவன் போட்ட முடிச்சு அர்ச்னைத்தட்டின் மூலம் அறிமுகம் ஆகி திருமணத்தில் முடிந்துள்ளது.  திருமணம் முடிந்ததும் அனைவரும் மீண்டுமொரு முறை அந்த கோயிலுக்குத் திரும்பச் சென்று இறைவனிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றனர்.


சம்மந்திகள் இருவரிடத்திலும் அர்ச்சனைத் தட்டு மாறியதால் ஏற்பட்ட குழப்பத்திற்கும் மணமக்கள் இருவரும் விமானத்தில் பயணிக்கும் போது நெருக்கமாக பேசி வந்த சமயம் இருவரும் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்னும் எதிர்பார்ப்புக்கும் இறைவன் போட்ட முடிச்சு மற்றும் இறைவனின் ஆசீர்வாதத்தின் காரணமாக இரண்டு இதயங்களும் ஒன்று சேர்ந்துள்ள நிஜமான வாழ்க்கைக்கும் இடையே நடந்த நிகழ்வுகளை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் அதே சமயம் நெருடலாகவும் இருக்கின்றது.  

 



Wednesday, July 14, 2021

Divorce Withdrawal : விவாகரத்து திரும்பப் பெறுதல்

 விவாகரத்து திரும்பப் பெறுதல்


இருமனம் கலந்தால் திருமணம். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். ஆயிரம் பொய்  (ஆயிரம் பேரிடம் போய்)  சொல்லி திருமணம் செய்து கொள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்றெல்லாம் சொல்லக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்துள்ளோம். 


https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/divorce-withdrawal.html


திருமணமான பின்னர் தம்பதியரிடையே சந்தோஷம் இருந்து ஒற்றுமையாக வாழ்ந்தால் அது இல்லறம்.


தம்பதியரிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு தம்பதியர் பிரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதற்குப் பெயர் விவாகரத்து. 


காதல் திருமணமாக இருந்தாலும் சரி. பெற்றோர்களாகப் பார்த்து திருமணம் செய்து வைத்ததாக இருந்தாலும் சரி. ஒருவர் மீது மற்றொருவர் அன்பு செலுத்தி வரும் வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது மாறுங்கால் விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன. 


சட்டப்படி விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தால் கணவன் மனைவி இருவரும் கருத்து வேற்றுமைக்கான காரணத்தை தெரிவிப்பதோடு ஒரு வருட காலம் கட்டாயம் பிரிந்திருக்க வேண்டும் என சட்ட நிபுணர்கள் கூறி வருகின்ற நிலையில் நீதி மன்றம் அல்லாத ஒரு இடத்தில் அதற்கான பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்டு அறிவுறைகள் வழங்கப்படுகின்றன. 


அவ்வாறு வழங்கப்படும் அறிவுறைகளை ஏற்றுக் கொண்டு மீண்டும் சேர்ந்து வாழ தம்பதியர் விரும்பினால் தொடர்ந்து வாழலாம். அதற்கு விருப்பமில்லையெனில் நீதி மன்றத்தை அணுகி சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். 


அறிவுறைகள் வழங்குபவர்கள் சட்டம் படித்தவர்களோ அல்லது மனோதத்துவ மருத்துவம் படித்தவர்களோ அல்ல. மனதினை படித்தவர்கள். உள் மனதில் உள்ள எண்ணங்களை கேட்டறிந்து கொள்பவர்கள். பிரச்சினைக்கான மூல காரணங்களை அறிந்து கொண்டு அதனை அலசி ஆராய்ந்து அறிவுறை வழங்குபவர்கள். 


இந்த இடத்திற்கு வருவோரிடமிருந்து குறைந்து பட்ச தொகை அவரவர் வசதிக்கேற்ப அவரவர் விருப்பப்படி ரூபாய் 100-லிருந்து லட்சக்கணக்கான ரூபாய் வரை நன்கொடையாக பெறப்பட்டு அந்த தொகை முழுவதும் விவாகரத்து பெற்ற பின்னர் பிழைப்புக்கு வழியில்லாத ஆதரவற்ற ஜீவனாம்சம் பெற இயலாத பெண்கள் மற்றும் விவாகரத்தின் காரணமாக கணவன் மனைவி இருவராலும் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகளின்  வளர்ச்சிக்காக மட்டுமே பயன் படுத்தப் படுகின்றது. அதற்கென “விவாகரத்து அனாதைகள் இல்லம்” உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வாறான ஒரு Divorce Orphanage மூலம் எப்படி விவாகரத்து பிரச்சினைகள் கையாளப்பட்டு தீர்த்து வைக்கப் படுகின்றன என்பது மிகவும் சுவையானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். 


விவாகரத்து கோறுகின்ற தம்பதியர் தனித்தனி அறைகளில் அவரவர் பெற்றோர்களுடன் அமர வைக்கப்பட்டு அவர்களிடத்தில் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்விகள் கேட்கப்படுவது மற்றும் பதில் சொல்வது அந்த அறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும்.  பதில்கள் சொல்வதில் வித்தியாசம் காணப்பட்டால் குறுக்குக் கேள்விகள் கேட்கப்படும்


கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் சொல்கின்ற பதில்கள் எதுவும் வேறு அறையிலுள்ள மனைவி மற்றும் மனைவி குடும்பத்தாருக்கு கேட்காது. அது போல மனைவி மற்றும் மனைவி குடும்பத்தார் சொல்கின்ற பதில்கள் எதுவும் வேறு அறையில் உள்ள கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்கு கேட்காது.  குடும்ப உறுப்பினர்களால் பிரச்சினை என்றால் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள்.


கேள்வி கேட்பவர்கள் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய F.M. Mike மற்றும் Headphone உடன் அமர்ந்து இருப்பார்கள். ஆலோசகர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் எதிரில் அமர்ந்துள்ளவர்களின் பதில்கள் ஆலோசகர்களுக்கு மட்டுமே கேட்கும். இந்த கலந்தாலோசனை சுப முகூர்த்த நாட்களில் மட்டுமே நடைபெறும். விவாகரத்து பெற நினைத்த தம்பதியர் ஒன்று சேர விரும்பினால் அன்றைய தினமே ஒன்று சேர்ந்து விடலாம்.


விவாகரத்துக்கு விருப்பம் தெரிவிக்கும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் கேட்கப்படும் கேள்விகளும் அவைகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதற்குப் பின்னர் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கப்படும்.


ஆலோசகர்கள் கேட்கும் கேள்விகள்:


1. உங்கள் பெயர்

2. உங்கள் வயது

3. உங்கள் படிப்பு விவரம்

4. உங்கள் உத்தியோகம்

5. உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணமா?

6. திருமணத்திற்கு முன்னர் யாருடனாவது நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதா? அது தெரிய வந்து சந்தேகம் ஏதேனும் வந்துள்ளதா?

7. உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? குழந்தைகள் எத்தனை?

8. உங்கள் வருமானம் மற்றும் செலவினம் பற்றிய விவரம்

9. விவாகரத்து வரை செல்லுமளவிற்கு உங்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டமைக்கான காரணம்.


உங்கள் பெயர் என்னும் 1-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன். அன்புக்கரசன்

மனைவி. அன்புக்கரசி


உங்கள் வயது என்னும் 2-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன். 28

மனைவி. 25


உங்கள் படிப்பு விவரம் என்னும் 3-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன். B.Tech

மனைவி. B.E


உங்கள் உத்தியோகம் என்னும் 4-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன். Team Leader Software Development

மனைவி. Software Development (I.T)

உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணமா என்னும் 5-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன். பெற்றோர் நிச்சயித்த திருமணம்

மனைவி. பெற்றோர் நிச்சயித்த திருமணம். 


திருமணத்திற்கு முன்னர் யாருடனாவது நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதா? அது தெரிய வந்து சந்தேகம் ஏதேனும் வந்துள்ளதா? என்னும் 6-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன்: திருமணத்திற்கு முன்னர் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு பெண்ணுடன் மிக மிக நெருக்கமாக பழகி காதல் ஏற்பட்டது. தொட்டுப் பேசும் அளவிற்கு நெருக்கம் கிடையாது. ஆனால் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜாதகப் பொருத்தம் வசதி வாய்ப்பு அந்தஸ்து வித்தியாசத்தின் காரணமாக அவள் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. என்னுடன் உயிருக்கு உயிராக பழகி விட்டு பெற்றோர் சொல்லுக்கு கட்டுப் படுகின்றேன் எனச்சொல்லி வேறு ஒருவனுக்கு மனைவியாகப் போய் விட்ட காரணத்தால் அவளை காதலித்த எண்ணங்களை என் இதயத்திலிருந்து நீக்கி விட்டேன். அவளிடமிருந்து வருகின்ற கைபேசி அழைப்புகளை கூட நான் தவிர்த்து விடுவேன். இது என் மனைவிக்கும் தெரியும் என் மனைவி என் மீது சந்தேகம் கொள்ளவில்லை. 


மனைவி: திருமணத்திற்கு முன்னர் பெற்றோருக்குத் தெரியாமல் ஒருவருடன் மிக மிக நெருக்கமாக பழகி காதல் ஏற்பட்டது. தொட்டுப் பேசும் அளவிற்கு நெருக்கம் கிடையாது. ஆனால் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட்டு வசதி வாய்ப்பு அந்தஸ்து கார் பங்களா வெளி நாட்டில் முதலிறவுக்கான பயணம் ஆகியவற்றின் மீது ஆசைப்பட்டு அவன் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. என்னுடன் உயிருக்கு உயிராக பழகி விட்டு பெற்றோர் சொல்லுக்கு கட்டுப் படுகின்றேன் எனச்சொல்லி 100 பவுன் நகை மற்றும் கார் பங்களா கிடைக்கும் இடத்தில் உள்ள பெண்ணை அவன் திருமணம் செய்து கொண்டான். 


இதயத்தில் உள்ள அன்பினை மதிக்காமல் சொத்து பத்து கிடைத்தால் போதும் என நினைத்து வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட காரணத்தால்  அவனை காதலித்த எண்ணங்களை என் இதயத்திலிருந்து நீக்கி விட்டேன். அவனிடமிருந்து வருகின்ற கைபேசி அழைப்புகளை கூட நான் தவிர்த்து விடுவேன். இது என் கணவருக்கும்  தெரியும் ஆனால் அவர் என் மீது சந்தேகம் கொள்ளவில்லை.


உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? குழந்தைகள் எத்தனை? என்னும் 7-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன். உடல் ரீதியாக பிரச்சினைகள் இல்லை. இல்லறத்தில் இருவரும் சந்தோஷமாகத் தான் இருந்து வந்துள்ளோம். குழந்தைகள் கிடையாது.


மனைவி: உடல் ரீதியாக பிரச்சினைகள் இல்லை. இல்லறத்தில் இருவரும் சந்தோஷமாகத் தான் இருந்து வந்துள்ளோம். குழந்தைகள் கிடையாது.


உங்கள் வருமானம் மற்றும் செலவினம் பற்றிய விவரம் என்னும் 8-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன். வருடாந்திர வருமானம் ரூபாய் 18 லட்சம்


மனைவி. வருடாந்திர வருமானம் ரூபாய் 3.6 லட்சம்.


விவாகரத்து வரை செல்லுமளவிற்கு உங்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டமைக்கான காரணம் என்னும் 9-வது கேள்விக்கு இருவரும் அளித்த பதில்கள்:


கணவன். எனது மாமனார் மாமியாருக்கு இரண்டு மகள்கள். என்னை மணமுடித்துக் கொண்டவள் முதல் பெண். இன்னுமொரு தங்கை  மருத்துவம் படித்து வருகின்றாள். முதல் மகளை நன்றாகப் படிக்க வைத்து நல்ல வேலையில் சேர்த்து விட்டார்கள். அவர்களுக்கு வயதாகி விட்டது. வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றார்கள். 


அவர்களால் வேறு எங்கும் சென்று உழைத்து சம்பாதித்து வாழ்க்கை நடத்த முடியாது என்னும் காரணத்தால் திருமணத்திற்கு முன்னர் பெண் பார்க்கச் சென்றிருந்த சமயம் மணப்பெண் அதாவது எனது தற்கால மனைவி ஒரு நிபந்தனை விதித்தாள். அது என்னவெனில் அவளுக்கு வருகின்ற மாதாந்திர சம்பளம் முழுவரையும் தங்கையின் மருத்துவப் படிப்பிற்காகவும் பெற்றோர் வீட்டுச் செலவுகளுக்காகவும் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரையில் அவர்களிடமே கொடுப்பேன். புகுந்த வீட்டில் கொடுக்க மாட்டேன் என்பது. நான் அதற்கு முழுமையாக சம்மதம் தெரிவித்து விட்டேன். காரணம் என்னுடைய சம்பளம் எனக்கு வரப்போகின்ற மனைவியின் சம்பளத்தை விட அதிகம். அந்த Gentleman Agreement-ன் படி நான் தற்போது வரையில் செயல்பட்டு வருகின்றேன்.


எனக்கு ஒரு தம்பி இருக்கின்றான். தம்பியின் பெயர் அன்புச்செல்வன். என்னைப் படிக்க  வைத்த எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பம் மற்றும் வருகின்ற விருந்தாளிகள் தங்குமளவிற்கு ஒரு பெரிய வீட்டினை சொந்தமாக வாங்கியுள்ளேன். அந்த வீடு வாங்கிய கடனுக்கு மாதாந்திரத் தவணை செலுத்தி வருகின்றேன். குடும்பத்தாருடன் வெளியில் சென்று வருவதற்கு ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் நான் அலுவலகத்திற்குச் சென்று வர ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் தொலைக்காட்சி. குளிர்சாதன பெட்டி மற்றும் மிக்சி கிரைண்டர் போன்ற அனைத்தையும் கடனில் வாங்கி EMI செலுத்தி வருகின்றேன். எனது தம்பியின் படிப்பிற்காக செலவு செய்து  வருகின்றேன். இது போன்ற காரணங்களால் நான் மிகவும் சிக்கனமாக வாழ்க்கை நடத்தி வருகின்றேன். 


மனைவி. வருடாந்திர வருமானம் ரூபாய் 3.6 லட்சம். என் பெற்றோருக்கு இரண்டு பெண்கள் மட்டுமே. எனக்கு ஒரு தங்கை இருக்கின்றாள். பெயர் அன்புச்செல்வி. ஆண் வாரிசுகள் கிடையாது. இரண்டு பெண்களையும் படிக்க வைக்க எனது தந்தை கடினமாக உழைத்து வந்தார். நான் பொறியியல் பட்டம் பெற்று உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டேன். தற்போது என் பெற்றோருக்கு வயதாகி விட்ட படியால் எங்கும் சென்று வேலை செய்ய முடியாத நிலையில் என்னுடைய முழுச் சம்பளத்தையும் எனது பெற்றோர் செலவுகளுக்காகவும் வீட்டு வாடகைக்கும் தங்கையின் மருத்துவப் படிப்பிற்கும் என என் பெற்றோரிடம் கொடுத்து விடுவேன். எனது சம்பளத்தைத் தவிர வேறு பண உதவி எதுவும் செய்ய மாட்டேன்.


இதற்குப் பின்னர் விவாகரத்து வரை செல்லுமளவிற்கு உங்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டமைக்கான காரணம் என்னும் 9-வது கேள்வியினைக் கேட்டனர்.


கணவன்: நான் எவ்வளவு அதிகம் சம்பளம் வாங்குகின்றேனோ அந்த அளவிற்குக் கடனும் வாங்கியுள்ளேன். வீடு மற்றும் இதர பொருட்களை வாங்கியதற்கான கடனையும் வட்டியையும் செலுத்தி முடித்த பின்னர் என் கூட்டுக் குடும்ப செலவு மற்றும் என் தம்பியின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக செலவு செய்து வருகின்றேன். தம்பி படித்து முடித்த பின்னர் என் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து தம்பிக்கு தனியாக ஒரு மருத்துவ மனை ஏற்பாடு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கி வைக்கின்றோம். நான் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்து வருமான வரியிலிருந்து வரி விலக்கு பெற்று வருகின்றேன். இந்த நிலையில் நான் அதிகமான சம்பளம் பெற்ற போதிலும் கணக்குப் பார்த்துத் தான் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. 


என் மனைவி எப்படி அவளது சம்பளத்தை அவளது பெற்றோரிடம் கொடுக்கின்றாளோ அதே போல என் சம்பளத்தை என் பெற்றோரிடம் முழுவதுமாக கொடுத்து நான் எனது செலவிற்கும் எனது மனைவியில் செலவிற்கும் அவர்களிடமிருந்து பணம் பெற்று வருகின்றேன். என் பெற்றோர் குடும்பத்தை நல்ல முறையில் வீண் செலவுகள் எதுவும் செய்யாமல் நிர்வகித்து வருகின்றார்கள். 


நிறைய கடன்கள் இருக்கின்றன என்னும் காரணத்தால் வருகின்ற சம்பளம் போதவில்லை. இந்த நிலைமை வெகு சீக்கிரத்தில் மாறி இயல்பு நிலைக்கு வந்து விடும். 


இந்த நிலையில் என் மனைவி என்னிடத்தில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த வேண்டும். விரும்பிய பொருட்கள் வாங்கியே தீர வேண்டும் என நினைக்கின்றாள். நான் அலுவல் காரணமாக எங்கேனும் வெளியூர் செல்ல நேர்ந்தால் அந்த சமயத்தில் செலவுக்கு பணம் கொடுத்து விட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றாள். இந்தக் காரணத்தால் நான் வெளியூர் செல்லும் சமயம் சொல்லி விட்டுச் செல்வதில்லை. எனவே என் மனைவியிடத்தில் என்னுடைய நிலைமையினை நன்கு புரிய வைத்து என்னோடு சேர்ந்து வாழ அறிவுறைகள் வழங்க வேண்டும்.  எனக்கு விவாகரத்தில் ஒப்புதல் இல்லை.


மனைவி: என் கணவர் நிறைய சம்பளம் பெறுகின்றார் என்பதன்  காரணமாக மிக மிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியும் என எதிர் பார்த்தேன். ஆனால் அவருக்கு நிறைய கடன்கள் இருக்கின்றன என்னும் காரணத்தால் அவருக்கு வருகின்ற சம்பளம் போதவில்லை. என்னை எங்கும் அழைத்துச் செல்ல முடியாது எனச் சொல்லி கஷ்டப்படுத்துகின்றார். எதனையும் வாங்கித் தர மறுக்கின்றார். எனவே இவரோடு இனிமேல் என்னால் தொடர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது எனத் தோன்றுகின்றது.


தம்பதியர் இருவரும் தத்தமது குடும்பத்தாருடன் தனித்தனியே அமர்ந்து அவர்கள் சொன்ன அத்தனை விவரங்களையும் கேட்டவர்கள் இறுதியாக அறிவுறை மற்றும் ஆலோசனை வழங்க ஆரம்பித்தார்கள். 


விவாகரத்து தொடர்பான அறிவுறைகள் வேண்டி நம்மை நாடி வந்துள்ள கணவர் தமது வருமானத்தில் பெரும்பங்கினை குடும்ப செலவுகளுக்கும் வீடு வாங்கிய கடனுக்கும் மற்றும் இதர பொருட்கள் வாங்கிய கடனுக்கும் செலுத்தி வருகின்றார். அதே சமயம் தமது தம்பியின் மருத்துவப் படிப்பிற்கும் செலவு செய்து வருகின்றார். இந்த நிலைமை கடன் சுமைகள் குறைந்தவுடன் சரியாகி விடும். அதே சமயம் அவரது மனைவி தமக்கு வருகின்ற சம்பளம் முழுவதையும் தமது பெற்றோரிடத்தில் கொடுத்து விட்டு அன்றாட செலவுகளுக்காக கணவரையும் கணவர் வீட்டாரையும் நம்பி இருக்க வேண்டியிருக்கின்றது. இந்த நிலையில் இருவரும் விவாகரத்து கோருவது சரியாக இருக்காது. இருந்தாலும் கடைசியாக இருவரும் ஏதேனும் சொல்ல முடிந்தால் அதனை தெரிவித்தால் முடிவான ஆலோசனை வழங்குவோம்.


கணவர்: எனக்கு மட்டுமே தெரிந்த என் மனைவிக்கோ அல்லது இருவரது குடும்பத்தாருக்கோ தெரியாத ஒரு ரகசியத்தினைக் கேட்ட பின்னர் முடிவினை அறிவிக்கலாம் எனத் தெரிவித்து விட்டு எனது தம்பி அன்புச்செல்வன் என் மைத்துனியான அன்புச்செல்வியை காதலித்து வருகின்றான். இருவரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றார்கள். படிப்பு முடிந்தவுடன் ஒப்புதல் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எனக்குத் தெரிய வந்துள்ளது. எனவே எனது தம்பி படித்து முடித்த பின்னர் ஆரம்பிக்கப் போகும் அன்பு மருத்துவ மனையில் என் மைத்துனியும் பங்கு வகிக்கப் போகின்றாள் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்பு மருத்துவ மனை எனப் பெயர் வைப்பதற்கான காரணம் நம் நால்வர் பெயரிலும் பொதுவாக அன்பு என்னும் வார்த்தை அடங்கியுள்ளது. இந்த விவரம் கேட்ட இரண்டு குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர். 


அதற்குப் பின்னர் கணவர் வாங்கியுள்ள கடன்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் முடிந்து விடும். அதே சமயம் ஒரு தம்பதியினர் விவாகரத்து கேட்டு அது கொடுக்கப்பட்டால் அதற்குப் பின்னர் அதே பெற்றோர் மீண்டும் சம்மந்திகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து தமது மக்களுக்கு அறிவுறை வழங்கி சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என சொன்னார்கள். இவற்றைக் கேட்ட விவாகரத்து கோரிய கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரே குரலில் நம் உடன் பிறப்புகளின் நலன் கருதி விவாகரத்து பேச்சினை இத்துடன் கைவிடுகின்றோம் என்று சொன்னார்கள்.


பெற்றோர் அறிவுறைகள் சொல்வதற்கு முன்பாகவே தனித்தனியே வந்த கணவன் மனைவி இருவரும் ஆட்டோவில் அருகருகே அமர்ந்து கொண்டு கணவன் இல்லத்திற்கு மிக மிகச் சந்தோஷமாகத் திரும்பினர். ஆனால் சம்மந்திகள் இருவரும் ஒரே காரில் அமர்ந்து கொண்டு தமது வருங்கால மருமகளை முன்கூட்டியே பார்ப்பதன் பொருட்டு புறப்பட்டனர். மணமகள் வீட்டாரை தமது இல்லத்திலேயே வந்து ஒன்றாக தங்கிக் கொள்றுமாறு மணமகன் வீட்டார் வற்புறுத்த திருமணம் நடக்கும் வரையில் மணமக்கள் தனித்தனியே இருந்தால் தான் திருமண நிகழ்ச்சி குதூகலமாக இருக்கும் எனச் சொல்லி விட்டனர். 


https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/divorce-withdrawal.html









ஆட்டோவில் சென்ற தம்பதியர் இருவரும் பெற்றோர் வருவதற்குள் உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்காக குளிர் பிரதேசத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டனர்.


விவாகரத்து பெறுவது தொடர்பான ஆலோசனைக்கு புறப்பட்டுச் செல்லும் சமயம் கணவன் மனைவி மற்றும் இரண்டு சம்மந்திகளின் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்துச் சென்ற எதிர்பார்ப்புகளுக்கும் ஆலோசனைக்குப் பின்னர் மீண்டும் தமது மக்கள் திருமணம் செய்து கொண்டு சம்மந்திகள் ஆகப் போகின்றார்கள் மறு முறையும் இரண்டு குடும்பத்தாரும் சம்மந்திகள் ஆகப் போகின்றோம் என்னும் நிஜமான நிகழ்வுகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்த போதிலும் இரண்டு குடும்பத்தாருக்கும் அளவில்லாத ஆனந்தம்.




Friday, July 9, 2021

Love Memories : காதல் நினைவுகள்.


 காதல் நினைவுகள்.


நானும் அவளும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு முறை அல்ல. இரு முறை அல்ல பல முறை கோயில்களுக்குச் சென்று நான்கைந்து ஆண்டுகள் வழிபாடு செய்து வந்தோம்.


நான் அவளுடன் ஒன்றாகச் சேர்ந்து பல முறை கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தது வசதியாகவோ அல்லது சொகுசாகவோ அல்லது ஆடம்பரமாகவோ வாழ வேண்டும் என்பதற்காக அல்ல.  எனது இதய சிம்மாசனத்தில் குடிகொண்டுள்ள அவளை என்னுடைய மனைவியாக அடைய வேண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே.


நமது காதலுக்கு நம் இருவர் இல்லங்களிலும் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. காரணம் இரண்டு குடும்பத்தாருக்கு இடையே இருந்த வசதி வாய்ப்பு மற்றும் அந்தஸ்து. எனது பெற்றோரின் சம்மதம் இல்லாமல் அவளை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் எனக்கென ஒரு வேலை அதன் மூலம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் என்பதற்காக நான் பணியில் சேருவதென நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். 


நான் சுயமாகச் சம்பாதித்து சொந்தக் காலிலே நினறால் தான் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்னும் இக்கட்டான நிலை. எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும் அவளும்  சேர்ந்து போகாத கோயில்கள் இல்லை. வழிபடாத தெய்வங்கள் இல்லை.


நம் இருவரது ஆசைகளும் கனவுகளும் ஆண்டவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலை வெளியூரில் கிடைத்த காரணத்தால் அவளை பிரிய மனம் இல்லாமல் சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கக் கூடிய வாய்புகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதனை அறிந்து கொள்ள எனது ஜாதகத்தை நாம் இருவரும் எடுத்துக் கொண்டு ஜோதிடரிடத்தில் சென்று காண்பித்தோம். 


எனது ஜாதகத்தை பார்த்த ஒரு ஜோதிடர் என்னுடைய ஜாதகம் ராமர் வம்சாவழி ஜாதகம் போல அமைந்துள்ள காரணத்தால் கட்டாயம் பதினான்கு ஆண்டுகள் உள்ளுரில் தங்கி இருக்க வாய்பில்லை எனச் சொன்னார். ஒரு ஜோதிடரிடத்தில் மட்டும் ஜாதகத்தைக் காண்பித்து நம்பி விடாமல் பல ஜோதிடர்களிடத்தில் ஜாதகத்தைக் காண்பிக்கும் பொருட்டு பலப்பல ஜோதிடர்களை அணுகிய போது அனைவரும் ஒன்று போலவே பலன் சொன்னார்கள். 


வேலை கிடைத்தமைக்கு கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தொடர்ந்து நானும் அவளும் சேர்ந்து ஒரு வார காலம் கோயில் குளங்களுக்குச் சென்று வந்தோம். உறவினர்களிடத்திலும் எனக்கு வேலை கிடைத்த விவரத்தினை தெரிவித்து வந்தோம். எனக்கு வேலை கிடைத்த விவரம் அறிந்த எனது நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதற்கு முன் கூட்டியே அச்சார வாழ்த்து தெரிவித்தார்கள். 


அரசாங்க வேலை கிடைத்து விட்டது என்பதன் காரணமாக நாம் இருவரும் திருமண செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் கட்டாயம் இணைவோம் என்னும் நம்பிக்கை வந்து விட்டது. இருந்த போதிலும் உற்றார் உறவினர் நண்பர்கள் சொந்தங்களுடன் சந்தோஷமாக இருக்க சொந்த ஊரிலேயே வேலை கிடைத்திருந்தால் நல்லது என எண்ணினோம்.


வெளியூரில் வேலை கிடைத்த காரணத்தால் வேலையில் சேரும் பொருட்டு இருவரும் பிரிய நேரிட்டது. வேலையில் சேருவதற்கு புறப்பட்டுச் செல்லும் நாள் வரையில் நாம் இருவரும் மிகமிகச்  சந்தோஷமாக இருந்தோம்.


இராமன் இருக்கும் இடம் தான்  சீதைக்கு அயோத்தி என்று சொல்வது போல நான் வெளியூர் சென்றவுடன் அவளால் அங்கு தனியே இருக்க முடியவில்லை. அவர்கள் வீட்டிலும் அவளை வீட்டில் வைத்திராமல் வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளுக்கு  அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். எனவே நான் நினைத்த நேரத்தில் ஊருக்கு வந்து அவள் ஊரில் இல்லாத காரணத்தால் அவளைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டது. 


ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல என்னால் பணியில் சேர்ந்த ஊரில் உள்ள கோயிலுக்குச் செல்லாமல் இருக்க முடியவில்லை. பழக்க தோஷம். நான் பணியில் சேர்ந்தவுடன் முதல் முறையாக அங்குள்ள ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்றேன். அங்குள்ள அம்மன் தமது வலக் கரத்தில் தாமரை மலருடன் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தாள். தாமரை மலரானது தடாகத்தில் உள்ள நீர் மட்டத்தைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருக்கும். எனவே அந்த அம்மனை வழிபடுவோர் கட்டாயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் எனச் சொல்லக் கேட்டு பூரிப்படைந்தேன். 


தொடர்ந்து சில காலம் அந்தக் கோவிருக்குச் சென்று வந்தேன் தனியாக. ஒவ்வொரு முறை கோயிலுக்குச் செல்லும் சமயமும் அவளது நினைவு என்னை வாட்டும். அப்போதெல்லாம் எனது எண்ணம் அவளைத் திருமணம் செய்து கொண்டு எதிர்காலத்தில் அம்மனைத் தரிசிக்க அடிக்கடி அந்தக் கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என இருக்கும்.


முதல் மாதச் சம்பளம் கிடைக்கப் பெற்றவுடன் நான் எனது சொந்த ஊருக்கு சென்று பெற்றோரிடத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டதற்கு எனது தாயார் விருப்பப் பட்டு ஒப்புதல் தெரிவித்தும் கூட தந்தை ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அவள் ஊரில் இல்லாததால் அவளைக் காண முடியாத ஏக்கத்துடன் பணியாற்றும் ஊருக்குத் திரும்பினேன்.  


அதன் பின்னர் மீண்டும் ஒரு முறை சொந்த ஊருக்குச் சென்று அவளது தாயாரிடத்தில் எனக்கு அவளை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு அவர்களும் மறுப்புத் தெரிவித்த காரணத்தால் மிக சோகத்துடன் பணியாற்றும் ஊருக்குத் திரும்பினேன்.  அப்போது அவள் ஊரில் இருந்தும் கூட அவளுடன் பேச முடியவில்லை.


நான் பணியாற்றி வந்த அலுவலகத்தில் மொத்தம் 15 பேர் மட்டும் பணியில் இருப்பார்கள். நான் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டு பணியாற்றி வந்தேன். சில நாட்களில் எனக்கு இன்னுமொரு இடத்தில் அரசாங்க வேலை கிடைத்தது. அந்த அலுவலகத்தில் ஆயிரக் கணக்கானோர் பணியாற்றி வருகின்ற காரணத்தால் அந்த வேலையில் சேருவதென தீர்மானித்து அதற்கான விருப்பத்தினைத் தெரிவித்து வேலையில் சேருவதற்கு தயாரானேன். 


https://desiredlifeandreallife.blogspot.com/2021/07/love-memories.html















 அந்த ஊரிலிருந்து புதிய பணியிடம் அமைந்துள்ள ஊருக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் கடைசியாக ஒரு முறை அந்த அம்மனை தரிசிக்க கோயிலுக்குச் சென்றேன். அந்த நேரத்தில் அம்மன் கையில் தாமரை மலருக்கு பதிலாக தங்கக் கிரீடத்தை மடியில் வைத்துக் கொண்டு வலது கரத்தால் பற்றிக் கொண்டு அருள் பாலிப்பது போன்ற அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.  கண்கொள்ளாக் காட்சியாக இருந்த அந்த அம்மனை நீண்ட நேரம் தரிசித்து விட்டு புதிய ஊரில் புதிய பணியிடத்தில் சேரும் பொருட்டு பயணமானேன். 


பழைய அலுவலகத்தில் நான் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி வந்தேன். ஆனால் புதிய அலுவலகத்தில் எனக்கு  அனைவரும் வணக்கம் செலுத்தும் படியான பொறுப்புடன் கூடிய பதவி கிடைக்கப் பெற்றது.


இந்நிலையில் அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு அழைத்து வருவதன் பொருட்டு அந்த ஊரில் வீடு பார்க்க ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் நான் அவளை அதே ஊரில் காண நேரிட்டது. பாவாடை தாவணி அணிந்த கன்னிப் பெண்ணாக அல்ல. சேலை ரவிக்கை அணிந்த மணமுடித்த மங்கையாக.  என்னைக் கண்டவுடன் அவளுக்கு அழுகை வந்து விட்டது. எனக்கும் அதே நிலை. இருவராலும் எதுவும் பேச முடியாத நிலையில் நீர் ததும்பிய கண்ணீருடன் நான் என் அறைக்குத் திரும்பினேன். அவள் நிலையும் அது தான். ஆமாம் இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள். 


அவள் அங்கு தான் வாழ்க்கைப் பட்டு வந்திருக்கின்றாள் என்பது முன்னமே தெரிந்திருந்தால் நிச்சயம் அந்த ஊருக்கு பணியில் சேர வந்திருக்க மாட்டேன். பல நாட்கள் கவலைப் பட்டேன்.


அவ்வாறான நேரங்களில் ஒரு நாள் இரவு நான் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த ஊரில் உள்ள அம்மனை வலக்கரத்தில் தாமரை மலருடன் வணங்கி வந்து விட்டு அந்த ஊரை விட்டு வரும் சமயம் மாத்திரம் அம்மனது வலது மடியில் தங்கத்தாலான கிரீடத்தை வைத்துக் கொண்டு வலக் கரத்தால் பற்றிக் கொண்டு காட்சி கொடுத்தது நினைவுக்கு வந்தது. 


ஆமாம் நான் அந்த ஊரை விட்டு வரும் சமயம் எனக்கு தங்கக் கிரீடத்தை பற்றிக் கொண்டு காட்சி கொடுத்து இனிமேல் எனக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த ராஜவம்ச மரியாதையும் தான் கிடைக்கும் என்பதனை சூசகமாக சொல்லாமல் சொல்லி அருள் பாலித்து அந்த அம்மன் உணர்த்தியிருக்கின்றாள் என்னும் புரியாத புதிரை வெளிப்படுத்தியதனை நான் அப்போது அறிந்து கொள்ளவில்லை என்பதனை நினைத்து வேதனைப் பட்டேன். 


நானும் அவளும் காதலர்களாக இருக்கும் சமயம் அம்மன் தனது திருக்கரத்தில் தாமரை மலருடன் அருள் பாலித்த காட்சியினையும் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தேறி விட்ட சமயம் அவளைப் பிரிந்த நான் இனிமேல் மதிப்பும் மரியாதையும் தான் பெறமுடியும் ஆசைப்பட்டவளை இல்லறத்தில் அடைய முடியாது என்பதனை கிரீடத்தை வலக்கரத்தில் பற்றிக்கொண்டு அம்மன் அருள் பாலித்த காட்சியினையும் நினைக்கும் போது நான் எதிர்பார்த்த வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தினை உணர்ந்து கொள்ள முடிகின்றது.