பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை
அந்தக் காலத்தில் 70 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் குணச்சித்திர வேடங்களில் கதாநாயகிகளாக நடித்தார்கள். அதற்குக் குறைவான எடை கொண்டோர் நாட்டியம் சார்ந்த கதாநாயகிகளாகவோ அல்லது நகைச்சுவை பாத்திரங்களிலோ நடித்தார்கள். தற்சமயம் 70 கிலோவிற்கு மேல் போய் விட்டால் அம்மா, அத்தை, அக்கா, மாமியார், நாத்தனார் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நிலை உருவாகி விட்டது.
நான் அந்தக் காலத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆரம்ப காலத்தில் ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கொரு பெண்ணும் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வாhழ்க்கை நடத்த விடும்பினோம். அந்தச் சமயத்தில் அரசாங்கம் நாமிருவர் நமக்கிருவர் எனச் சொல்லி குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்தினை ஊக்குவித்து வந்தது.
நானும் என் மனைவியும் ஆசைப்பட்டது போல நமக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்து நல்ல ஒழுக்கத்துடன் முன்னேறி பட்டப்படிப்பின முடித்து விட்டார்கள். நமது செல்லப் பெண்னிற்கு திருமண ஏற்பாடுகள் செய்து திருமணம் நடந்தேறி சம்மந்தி வீட்டில் மிக மிகச் சந்தோஷமான வாழ்க்கை நடத்தி வருகின்றாள்.
நமது மகனுக்கு திருமண வயது வந்து விட்டது. திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்தோம். சரியாக வரன் அமையவில்லை. ஒரு மாதம் அல்ல. இரண்டு மாதம் அல்ல இரண்டு மூன்றாண்டுகள் வரன் பார்த்து வந்தோம். வரன் அமையவில்லை. இந்த மன உளைச்சலின் காரணமாக எனது மனைவிக்கு உடல் நலக் குழைவு ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் உடல் நலமின்மை காரணமாக எங்கும் செல்ல முடியவில்லை.
அது பிற்காலத்தில் நானும் என் மனைவியும் எங்கு சென்றாலும் மகனுக்கு எப்போது திருமணம் எப்போது விருந்து போடப் போகின்றீர்கள் என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விசாரிக்க ஆரம்பித்த பின்னர் என் மனைவிக்கு வெளியில் செல்வதில் விரக்தி ஏற்பட்டமையினால் வீட்டிலேயே முடங்க ஆரம்பித்தாள். அந்த மன அழுத்தத்தின் காரணமாக உடல் நிலை மிகவும் மோசமாகத் தொடங்கியது. மருத்துவச் செலவுகள் அதிகமாக ஆரம்பித்தன.
இந்த நிலையில் எங்கள் மகள் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக சம்மந்தி வீட்டாருக்கு மருமகளை எங்கள் வீட்டிற்கு அனுப்புவதில் சலிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் எங்கள் மகள் எங்கள் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தாள். மகள் வந்து செல்வதில் ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் வீட்டில் உடல் நலமில்லாமல் மனைவி கஷ்டப் படுவதைப் பார்க்கும் போது மிகவும் சோகமாக இருக்கும்.
இந்நிலையில் ஒரு நாள் எங்கள் மகள் எங்களிடத்தில் அவளது மாமனார் மற்றும் மாமியார் வந்து என் மனைவியை பார்த்துச் செல்ல விரும்புவதாகவும் அவர்கள் உடல் நலமின்றி இருக்கும் என் மனைவியை குணமாக்க சில ஆலோசனைகள் சொல்ல இருப்பதாகவும் தெரிவித்தாள். நானும் என் மனைவியும் கலந்து ஆலோசித்து சரியென ஒப்புக் கொண்டோம்.
அதன்படி ஒரு நாள் காலையில் என் மகளுடன் என் சம்மந்தி வீட்டார் எனது இல்லத்திற்கு வருகை தந்தார்கள். என் மகனும் அப்போது வீட்டில் இருந்தான். அவர்களுக்கு பகல் உணவும் நமது வீட்டிலேயே ஏற்பாடு செய்து விட்டோம். சம்மந்தி வீட்டார் என் மனைவியின் உடல் நலம் பற்றிக் கேட்டறிந்து அதற்கான மூல காரணம் மகனுக்குத் திருமணம் நடைபெறாதது தான் என அறிந்து கொண்டார்கள். அவர்கள் என்னிடத்தில் சில விஷயங்களை மகனையும் வைத்துக் கொண்டு பேச வேண்டும் எனச் சொன்னார்கள். நாங்களும் சரியென ஒப்புக் கொண்டோம்.
அதன் பின்னர் என் குடும்பத்தாருக்கு எனது சம்மந்தி அறிவுறைகள் வழங்கத் துவங்கினார். அச்சமயத்தில் அவர் சொல்லப் போகின்ற விஷயங்களைக் கேட்டு யாரும் போபப் படவோ அல்லது பேச்சினை பாதியில் புறக்கணித்து யாரும் வெளியில் செல்லவோ கூடாது எனவும் அவர் சொல்வதனை இடை மறிக்காமல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அன்புக் கட்டளையிட்டார். அனைவரும் சரியென ஒப்புக் கொண்ட பின்னர் அவர் அவரது அறிவுரைகளை ஆரம்பித்தார்.
பழைய காலத்தில் ஒன்று சொல்வார்கள். அது என்னவெனில் ஏழு பலம் சர்க்கரை என எழுதி வைத்துக் கொண்டு நக்கினால் அது இனிக்காது. உண்மையில் சர்க்கரையினை மாத்திரம் வாயில் போட்டுக் கொண்டால் தான் இனிப்புச் சுவை என்னவென்பது தெரியும்.
வாணிபத்தில் விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் சரி பழைய இரும்பாகவோ அல்லது பழைய காகிதமாகவோ இருந்தாலும் சரி. நாம் அதனை 100 ரூபாய் பணம் ரொக்கமாகக் கொடுத்து கொள்முதல் செய்து அதனை 102 ரூபாய்க்கு ரொக்கத்திற்கு விற்பனை செய்தால் கட்டாயம் இரண்டு ரூபாய் இலாபம் கிடைக்கும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல ரூபாய் 100க்கு மேல் இலட்சக் கணக்கிலோ அல்லது கோடிக் கணக்கிலோ வாணிபம் செய்வோமேயானால் அதற்குத் தகுந்த லாபம் நமக்கு கட்டாயம் கிடைக்கும். கிடைக்கின்ற லாபத்தை வைத்துக் கொண்டு மேன் மேலும் வாணிபத்தை பெருக்கும் வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும்.
நான் ஆரம்ப காலத்தில் பழைய இரும்பு வாங்கி விற்று அதன் மூலம் இலாபம் சம்பாதித்து எனது வாணிபத்தைப் பெருக்கி தற்போது இரும்பினாலான குண்டூசி முதல் வைரம் பதித்த தங்க நகைகள் வரையில் அனைத்தும் கிடைக்கும் சூப்பர் மார்க்கட்டாக வளர்த்துள்ளேன். தற்போது எங்களது சூப்பர் மார்கட்டில் நெற்றியில் பூசும் குங்குமம் முதல் கர்ப்பக் கிரஹத்தில் உள்ள கடவுளுக்கு செலுத்தும் வைரக் கற்கள் பதித்த தங்கக் கிரீடம் வரையில் விற்பனை செய்கின்றோம். எங்கள் கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் தரையினைத் துடைக்கும் துடைப்பம் முதல் தலையைத் துடைக்கும் துண்டு வரை எதுவும் கிடைக்கவில்லை என்று வெளியில் செல்லக் கூடாது எனும் நோக்கில் அனைத்துப் பொருட்களையும் காய்கறி முதல் கட்டில் மெத்தை வரை சேகரித்து வியாபாரம் செய்கின்றோம்.
உங்கள் மகன் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையில் சேர்ந்து சம்பளம் பெற ஆரம்பித்து இருந்தால் அதனை நம்பி யார் வேண்டுமானாலும் பெண் கொடுப்பார்கள். அது மாதிரி இல்லாமல் சிறிய அளவில் வியாபாரம் செய்வதனைப் பார்த்தால் கூட அதனைக் கண்டு பெண் கொடுப்பார்கள்.
ஆனால் உங்கள் மகன் நன்றாகப் படித்து விட்டு ஏழுபலம் சர்க்கரை என எழுதிக் காட்டி நக்கிப் பாருங்கள் என்பது போல எங்கோ யாரோ நடத்தும் வாணிபத்திற்கு வீட்டிலிருந்த படியே முதலீடு செய்து அதன் மூலம் லாபம் ஈட்ட வேண்டும் என எதிர்பார்த்திருப்பதன் காரணத்தால் வரன் அமையவில்லை.
பங்கு வர்த்தகம் அல்லது பங்குச் சந்தை என்பது எப்போதும் நிலையான வருமானத்தைக் கொடுக்காது. விலை குறைவான நேரங்களில் பங்குகளை வாங்கி வைத்து பங்குகள் விலை ஏறும் சமயம் விற்பனை செய்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். ஆனால் எப்போது லாபம் வரும் எப்போது நஷ்டம் வரும் என்பதனை முன் கூட்டியே ஊகிக்க முடியாது. இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பங்குகளின் விலை சரிகின்றதா அல்லது ஏறுகின்றதா என கண் கொத்திப் பாம்பு போல கண்காணிக்க வேண்டும்.
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு என்பது போல நாம் வாங்கி வைத்துள்ள பங்குகளை விலையேற்றம் உள்ள சமயம் விற்பனை செய்ய வேண்டும் அதுவரையில் காத்திருக்க வேண்டும். எனவே நம்மிடமுள்ள பங்குகள் விவரம் மற்றும் பங்குகள் வாங்கிய தொகை விவரத்தினை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அந்தப் பங்குகள் விற்பனை மதிப்பினை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும். நம்மிடத்தில் உள்ள பங்குகளின் விலை குறைந்தால் அந்த நேரத்தில் விற்பனை செய்தால் நஷ்டம். அதே நேரம் நம்மிடத்தில் உள்ள பங்குகளின் விலை உயர்ந்தால் லாபம். ஒரே நேரத்தில் கணினித் திரைக்கு முன்னர் அமர்ந்து கொண்டு நம்மிடத்தில் உள்ள பங்குகளுக்கு எதிரே சிகப்பு நிறம் தெரிந்தால் கன்னத்தில் கைவைத்து சோகம் அடைவதும் பச்சை நிறம் தெரிந்தால் உடனே சந்தோஷம் அடைவதும் கூட ஒரு வகையில் நமது உடல் நிலையினை பாதிக்கும். பச்சை நிறம் தெரிந்தவுடன் நம்மிடத்தில் உள்ள பங்குகள் இன்னும் அதிக விலைக்குப் போகும் எனப் பேராசைப்பட்டால் அது கூட நமக்குத் தீங்கு விளைவிக்கும்.
சில நேரங்களில் நம்மிடத்தில் உள்ள பங்குகளின் விலை கீழ்க்கண்ட காரணங்களால் சரிந்து விடும்.
• உள் நாட்டுக் கலவலம்
• இனக் கலவரம்
• மதக் கலவரம்
• அரசியல் மாற்றங்கள்
• அரசாங்கங்களின் கொள்கை முடிவுகள்
• பண புழக்கம் இல்லாமை
• பண முடக்கம்
• நிர்வாகச் சீர்கேடு
• வணிகத்தில் நஷ்டம்
• தொழில் முடக்கம்
• உள் நாட்டுப் போர்
• உலகத்தில் உள்ள ஏதேனும் இரண்டு நாடுகளுக்கு இடையே போர்.
• உலகப் போர்
• இயற்கைச் சீற்றங்கள்
• பேரழிவுகள்
• வாணிப முடக்கங்கள்
• சட்டம் ஒழுங்கு சீர்குலைதல் காரணமாக ஊரடங்குகள்.
இவ்வாறான நேரங்களிலும் இது போன்ற பல காரணங்கள் உள்ள நேரங்களிலும் நாம் கட்டாயம் பணப்புழக்கம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தையில் மட்டும் நாட்டம் செலுத்தினால் தினப்படிச் செலவுகளை ஈடு செய்ய முடியாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வருமானத்தை தரக்கூடிய வாணிபத்திலோ அல்லது தொழிலிலோ இருப்போர் அல்லது சேவை செய்வதிலோ இருப்போர் தமக்கு அபரிமிதமாக வருகின்ன வருமானத்தை பங்குச் வர்த்தகத்திலோ அல்லது பங்குச் சந்தையிலோ முதலீடு செய்தால் வாழ்க்கை நடத்த நிலையான வருமானம் வேறு வழிகளில் வந்து விடும் என்னும் காரணத்தால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தையில் மட்டும் கவனம் செலுத்தி அந்த வருமானத்தைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்த வேண்டுமெனில் கட்டாயம் நித்திய கண்டம் பூரண ஆயுசு எனத் தவிக்க வேண்டும் எனச் சொல்லி முடித்தார்.
அதன் பின்னர் இதற்கு ஏதேனும் தீர்வு கொடுங்கள் எனக் கேட்டேன். அதனைக் கேட்ட என் சம்மந்தி என் மகனிடத்தில் அவரது மகளைப் பிடிக்குமா எனக் கேட்டார். என் மகன் ஒளிவு மறைவு இல்லாமல் சற்றும் தயங்காமல் பிடிக்கும் எனச் சொன்னான். அதன் பின்னர் என் சம்மந்தி என்னிடத்தில் என் மகள் நான் சொல்லும் பேச்சினை தட்டமாட்டாள். எனவே என் மகளை நீங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்கின்றீர்களா எனக் கேட்ட சமயம் என் மனைவியும் என் மகனும் தங்களது ஒப்புதல்களை சைகையினால் தெரிவித்த பின்னர் நான் அவர்களிடத்தில் சரியெனச் சொன்னேன்.
அதன் பின்னர் எனது சம்மந்தி சில நிமிடங்கள் வெளியில் சென்று தமது மகளுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசி அவளது சம்மதம் கிடைத்தவுடன் உள்ளே வந்து உங்கள் மகனை திருமணம் செய்து கொள்ள என் மகளும் சம்மதித்து விட்டாள் எனச் சொன்னதைக் கேட்ட என் மனைவியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
அதன் பின்னர் அவர் மீண்டும் பேச்சினைத் தொடர்ந்தார். எங்கள் வியாபாரத்தினை மேலும் பெருக்க இன்னுமொரு இடத்தில் எங்கள் கடையினைப் போன்றே பெரிய கடை துவக்க ஆரம்பித்து வேலைகள் நடந்து வருகின்றன. எனக்கு வருகின்ற மாப்பிள்ளைக்கு சீர்வரிசையாக அந்தக் கடையினை ராசியான என் மகள் பெயரில் ஆரம்பித்து திருமணம் முடிந்த நாளன்று அந்தக் கடையின் திறப்பு விழாவினையும் நடத்தி முடிக்கலாம் எனச் சொன்னார். தற்போது உங்கள் மகன் வசம் வைத்துள்ள பங்குகளை விலையேற்றத்தின் சமயம் விற்பனை செய்து அந்தத் தொகையினையும் வியாபாரத்தில் முதலீடு செய்து முன்னேற்றம் அடைந்து மேலும் ஒரு கிளை ஆரம்பித்தால் நாங்கள் மிகவும் சந்தோஷமடைவோம் என மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
எங்களுக்கு மகள் பிறந்த பின்னர் தான் அதிர்ஷ்டம் வந்து வளர ஆரம்பித்து முன்னேற்றம் அடைந்தோம். உங்கள் மகள் எங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்த பின்னர் இரட்டிப்பு முன்னேற்றம். அந்த இரட்டிப்பு முன்னேற்றம் உங்கள் மகனை எனக்கு மாப்பிள்ளை ஆக்கப் போகின்றது எனச் சொன்ன சமயத்தில் இரண்டு குடும்பத்தாருக்கும் மிக்க மகிழ்ச்சி. இதற்குப் பின்னர் எங்கள் சம்மந்தி வீட்டார் மதிய உணவு விருந்து முடிந்த பின்னர் தமது இல்லத்திற்குத் திரும்பினர். விரைவில் திருமண நாள் குறிக்கப்பட்டது.
பிரம்ம முகூர்த்த வேளையில் அதாவது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் திருமணம் மற்றும் காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் சூப்பர் மார்க்கட் திற்ப்பு விழா ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட என மனைவி முன்பு போல பூரணமாக நலம்பெற்று திருமண வேலைகள் மற்றும் புதிய கடை திறப்புவிழா என அனைத்திலும் மிக்க சுறுசுறுப்புடன் ஈடுபட்டு அளவுக்கு அதிகமான சந்தோஷத்துடன் காணப்பட்டாள்.
மகனுக்கு வரன் அமையவில்லை என்கினற காரணத்தால் என் மனைவியில் உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்த போது என்ன நடக்குமோ என எதிர்பார்த்துக் காத்திருந்ததற்கும் மகனுக்குத் திருமணம் நடப்பதை நேரில் காண்கின்ற சமயம் உள்ள என் மனைவியின் உடல் நிலை தேர்ச்சி மற்றும் தேக ஆரோக்கியத்தை நினைத்துப் பார்க்கும் போது நிஜத்தில் காண்கின்ற சமயம் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது.
புதிய மருமகள் வீட்டிற்கு வந்து விட்டாள். மகள் இருக்கும் போது கிடைத்த வகை வகையான உணவினைப் போல மருமகள் வந்தபின்னர் உண்டதன் காரணமாக என் மனைவியின் உடல் நிலை பரிபூரணமாகத் தேறி தன் மகனைப் பார்ப்பதற்கு தமது மருமகள் பெயரில் உள்ள கடையினை மகன் கவனித்துக் கொள்ளும் விதத்தினைக் காண கடைக்கு மருமகளுடன் நான்கு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்று வரும் அழகினைக் காணக் கண்கள் கோடி வேண்டும. அந்த அளவிற்கு மன நிறைவு மற்றும் சந்தோஷம் நம் குடும்பத்தில்.